பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜனனிக்கு ஆர்மி ஆரம்பிக்கப்பட்டுள்ள சம்பவம் இணையதளத்தில் பேசுபொருளாகி உள்ளது. 


பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கிய நிலையில், கடந்த முறை ஒளிரப்பான பிக்பாஸ் அல்டிமேட் போலவே, இந்த சீசனும் முழுவதும், 24 மணி நேர ஒளிபரப்பாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஜனனியும் ஒருவர். இதுதொடர்பான தகவல் வெளியான உடனேயே அவர் ரசிகர்களால் கவனிக்கத்தக்க ஒருவராக மாறினார்.  






இதில் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த ஜனனி  செய்தி வாசிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக பணியாற்றியவர்.  பிக்பாஸ்  முதல் சீசனில் இருந்தே பங்கேற்க வேண்டும் என விருப்பம் கொண்டவராக இருந்துள்ளார். ஆனால் வயது காரணமாக பங்கேற்காமல் இருந்த அவர் 21 வயதில் சீசன் 6ல் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என நம்பிக்கையோடு இருந்து தற்போது பங்கேற்றுள்ளார். 






நிகழ்ச்சியில் தோன்றிய அவர் சின்ன வயதில் வாழ்த்து அட்டையில் இடம் பெறும் த்ரிஷாவை பார்த்து யாரென்றே தெரியாமல் அவரைப் போல ஆக வேண்டும் என நினைத்தேன் என தன் நினைவுகளை பகிர்ந்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ஏற்கனவே சீசன் 3ல் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியாவைப் போல ஜனனியும் மிகப்பெரிய அளவில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 






இந்நிலையில் கடந்த சீசன்களில் ஓவியா, யாஷிகா, லாஸ்லியா, ஷிவானி, பாவ்னி ஆகியோருக்கு ஆர்மி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இம்முறை ஜனனிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் பலவித மீம்ஸ்களும் பகிரப்பட்டு வருகிறது.