Bigg Boss JANANY: 5 ஆண்டு சபதம்.. லாஸ்லியா பாணியில் பிக்பாஸ் என்ட்ரி.. யார் இந்த இலங்கை ஜனனி?
Bigg Boss 6 Tamil JANANY: இலங்கையை சேர்ந்த ஜனனி குணசீலன் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார். செய்தி வாசிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக இருந்த இவர் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ள இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஜனனி மீது ரசிகர்களின் பார்வை குவிந்து வருகிறது.
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிக்பாஸ் என்றாலே நினைவுக்கு வருவது பிரமாண்ட வீடு தான்.
முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன் போட்டியாளர்களான யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, ரியோ, ரம்யா பாண்டியன், நிரூப், பிரியங்கா உள்ளிட்ட பலரும் ஆட்டம் ஆடி வரவேற்றனர். இவர்களை தொடர்ந்து வந்த கமல், ”வேட்டைக்கு தயாரா” என்ற முழக்கத்துடன் வீட்டின் உள்ளே சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த இடங்களை சுற்றிக் காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் இதுவரை ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.
யார் இந்த ஜனனி?
இதில் இலங்கையை சேர்ந்த ஜனனி குணசீலன் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார். செய்தி வாசிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக இருந்த இவர் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர். பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ள ஜனனி பிக்பாஸ் முதல் சீசனில் இருந்தே பங்கேற்க வேண்டும் என விருப்பம் கொண்டவராக இருந்துள்ளார். ஆனால் வயது காரணமாக பங்கேற்காமல் இருந்த அவர் 21 வயதில் சீசன் 6ல் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என நம்பிக்கையோடு இருந்துள்ளார். தற்போது பங்கேற்றுள்ளார்.
பிக்பாஸ் 3வது சீசனில் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா போல இம்முறை இவரும் களமிறங்கியுள்ள ஜனனிக்கு ஏற்கனவே ஆர்மி உருவாகி விட்டது குறிப்பிடத்தக்கது.