தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த சீசனுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வரும் நிலையில், தற்போது 9வது சீசன் இன்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 

Continues below advertisement

சூடுபிடித்த பிக்பாஸ்:

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பவர்களாக இருப்பவர்கள் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், இயக்குனர் ப்ரவீன்காந்தி, ராப் பாடகர் எஃப் ஜே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளனர்.

திவாகர், எஃப்ஜே, ப்ரவீன்காந்தி:

ஏனென்றால், இவர்கள் 3 பேரும் மிகவும் ஆர்வத்துடனும், துடிப்புடனும் ஏதாவது வித்தியாசமாக செய்து வருகின்றனர். வாட்டர்மெலன் ஸ்டார் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக்கொண்ட திவாகர் பிக்பாஸ் சக போட்டியாளர்கள் முன்பு தனது நடிப்பை காட்டினர். கர்ணன் இறுதிக்காட்சியில் சிவாஜி உயிரிழக்கும் காட்சியை நடித்துக் காட்டினார். 

Continues below advertisement

மறுபுறம் ராப் பாடகர் எஃப் ஜே வாயிலே டிரம்ஸ் வாசித்துக் கொண்டே ஆங்காங்கே உலா வந்து கொண்டிருக்கிறார். மற்றொரு புறம் இயக்குனர் ப்ரவீன்காந்தி சக போட்டியாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டே இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஆடின்னே இருப்பேன் என்று குட் பேட் அக்லி படத்தை பார்த்துவிட்டு வந்த அஜித் ரசிகர் உற்சாக மிகுதியில் பேட்டி அளிப்பார். அந்த வீடியோ வைரலாகியது. 

ஆடின்னே, பாடின்னே, நடிச்சுன்னே இருப்பேன்:

அதேபோல, வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் நடிச்சுன்னே இருப்பேன்.. ப்ரவீன்காந்தி பேசின்னே இருப்பேன் என்றும், எஃப் ஜே வாயிலே வாசிச்சுட்டே இருப்பேன் என்பது போலவும் நடந்து கொண்டிருக்கின்றனர். இதனால், இவர்கள் ஒவ்வொரு எபிசோடிலும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். 

மேலும், மீம் கிரியேட்டர்களுக்கு அடுத்து வரும் நாட்களில் இவர்கள் மிகப்பெரிய அளவில் கன்டன்ட் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவர்களுடன் விஜே பார்வதி, குக் வித் கோமாளி கனி, சீரியல் நடிகை ஆதிரை, நடிகர்கள் சபரி, விஜே கெனி போன்றவர்களும் தற்போது வரை உள்ளே சென்றுள்ளனர். 

100 நாட்கள் நடைபெற உள்ள இந்த ரியாலிட்டி ஷோவில் ஒவ்வொரு நாளும் டாஸ்க்குகளும், காரசாரமான வாதங்களும் நடக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் முதல் நாளே போட்டியாளர்களுக்கு பிரச்சினையை உண்டாக்கும் விதமாக குளியலறையில் தண்ணீர் வராததால் போட்டியாளர்கள் மத்தியில் பெரும் சிரமத்தை உண்டாக்கியுள்ளது.