தமிழில் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். வெளிநாடுகளில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற இந்த நிகழ்ச்சி இந்தியாவிலும் பல மொழிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்படுகிறது. 

Continues below advertisement

பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவை எந்தெந்த மொழிகளில் யார்? யார்? தொகுத்து வழங்குகின்றனர் என்பதை கீழே காணலாம்.

1. இந்தி:

அர்ஷத் வர்ஷி

Continues below advertisement

ஷில்பா ஷெட்டி

அமிதாப் பச்சன்

சஞ்சய் தத்

சல்மான் கான்

ஃபாரா கான்

கரண் ஜோஹர்

அனில் கபூர்

பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியை முதன்முதலில் அர்ஷத் வாஷிதான் தொகுத்து வழங்கினார். அமிதாப் பச்சன், ஷில்பா ஷெட்டி போன்ற பிரபலங்கள் தொகுத்து வழங்கியிருந்தாலும் இந்தியில் பிக்பாஸ் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு சல்மான்கானே காரணம். சல்மான்கான் தொகுத்து வழங்குவதை காண்பதற்காகவே இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பலரும் விரும்பி பார்ப்பார்கள்.

2. கன்னடம்:

சுதீப்

இந்திக்கு அடுத்தபடியாக கன்னடத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியை கன்னடத்தில் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை கன்னட திரையுலகின் முன்னணி கதாநாயகனான கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார். 

3. தமிழ்:

கமல்ஹாசன்

ரம்யா கிருஷ்ணன்

சிம்பு

விஜய் சேதுபதி

தமிழில் 2017ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன் முதன்முதலில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். கமல்ஹாசன் 2023ம் ஆண்டு வரை தொகுத்து வழங்கிய நிலையில் இடையில் சில காரணங்களால் அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன், சிம்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.  அதன்பின்பு கடந்த சீசன் முதல் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

4. தெலுங்கு:

ஜுனியர் என்டிஆர்

நானி

நாகர்ஜுனா

ஸ்ரீமுகி

பிக்பாஸை தெலுங்கில் முதன்முதலில் தொகுத்து வழங்கியவர் ஜுனியர் என்டிஆர். பின்னர், நானி தொகுத்து வழங்கினாலும் அந்த மொழியில் வெற்றிகரமான தொகுப்பாளராக உலா வருபவர் நாகர்ஜுனா. 

5.மராத்தி:

மகேஷ் மஞ்ச்ரேக்கர்

ரிதேஷ் தேஷ்முக்

மராத்தி மொழியில் 2018ம் ஆண்டு முதல் பிக்பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. அங்கு மகேஷ் மஞ்ச்ரேக்கர் மற்றும் நடிகை ஜெனிலியா கணவர் ரிதேஷ் தேஷ்முக் தொகுத்து வழங்கியுள்ளனர்.

6. மலையாளம்:

மோகன்லால்

மலையாளத்தில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பிக்பாஸ் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை தாெடக்கம் முதலே மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். மலையாளத்தில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. 

7.வங்காளம்:

மிதுன் சக்ரபோர்த்தி

ஜீத்

வங்காள மொழியில் 2013ம் ஆண்டு மற்றும் 2016ம் ஆண்டு வரை மட்டுமே ஒளிபரப்பானது. மிதுன் சக்ரபோர்த்தி 2103ம் ஆண்டிலும், 2016ம் ஆண்டு ஜீத்தும் தொகுத்து வழங்கினர்.