பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் 50 நாட்களை கடந்து தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சி குறித்து புதிய சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. போட்டியாளர்கள் தேர்வு , அவர்களின் நடவடிக்கைகள் , நிகழ்ச்சித் தொகுப்பாளருடன் வாக்குவாதம் என பல்வேறு விமர்சனங்கள் இந்த சீசனில் கூறப்படுகின்றன. அந்த வகையில் தற்போது பாபா சாகேப் அம்பேத்கர் பெயரை ம்யூட் செய்ததற்காக விஜய் தொலைக்காட்சியை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். 

Continues below advertisement

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்த நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ் தமிழ். தற்போது இந்த நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு விஜய் சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். மற்ற சீசன்களைப் காட்டிலும் இந்த சீசன் குறித்து ரசிகர்களுக்கு நிறைய கருத்து வேறுபாடுகளும் விமர்சனங்களும் இருந்து வருகின்றன. முந்தைய சீசன்களைக் காட்டிலும் இந்த சீசனின் போட்டியாளர்கள் வரம்பு மீறி நடந்துக்கொள்வது , தகாத வார்த்தைகளை பேசுவது என எல்லை மீறி நடந்துகொள்கிறார்கள். இதனால் குழந்தைகளுடன் ஜாலியாக பார்த்து வந்த நிகழ்ச்சியின் மேல்  ரசிகர்களுக்கு  ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. 

பள்ளிக்கூட டாஸ்க்

பிக்பாஸ் 9 ஆவது சீசனில் இந்த இந்த மாதம் பள்ளிக்கூட டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி குழந்தைகளைப் போல் சீருடை அணிந்து டாஸ்க்கில் கலந்துகொள்வார்கள். ஆண்கள் மீசை தாடி எல்லாம் ஷேவ் செய்து சின்ன குழந்தைகள் போல் உலா வர பெண்கள் ரெட்டை சடை போட்டு உலா வருகின்றன. 

Continues below advertisement

அம்பேத்கர் பெயர் ம்யூட் செய்த பிக்பாஸ்

இந்த டாஸ்க்கின் போது கானா வினோத் டாக்டர் அம்ப்தேகரின் வாசகம் ஒன்றை பேசினார். 'நீ கற்ற கல்வி உன் சமுதாயத்திற்க்கு பயன்படவில்லை எனில் நீ கற்றதில் பயன் இல்லைனு பாபாசாகேப் அம்பேத்கர் சொல்லிருக்காரு' என கானா வினோத் கூறினார். இதில் டாக்டர் அம்பேத்கர் என்கிற பெயரை மட்டும் விஜய் தொலைக்காட்சி ம்யூட் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.