பிக்பாஸ் தமிழ் சீசன் 8
பிக்பாஸ் தமிழின் 8 ஆவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. முந்தைய சீசன்களை தொகுத்து வழங்கிய கமல் விலகிக் கொள்ள புதிய தொகுப்பாளராக அடி எடுத்து வைத்த விஜய் சேதுபதி. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் சில வாரங்கள் கடந்து வைல்டு கார்டு சுற்றில் மேலும் ஆறு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தார்கள். அடுத்தடுத்த வார எலிமினேஷனில் இதுவரை 12 போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் மீதமுள்ள 12 போட்டியாளர்கள் டைட்டிலுக்காக போட்டி போட்டு வருகிறார்கள்.
குடும்பத்தினரை சந்திக்கும் சுற்று
ஒவ்வொரு வாரமும் புதுப்புது சுற்றுகள் நடந்து வரும் நிலையில் இந்த வாரம் போட்டியாளர்கள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்கும் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர் முத்துகுமரனின் பெற்றோர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து முத்துகுரமனுடன் உரையாடியது ரசிகர்களின் உள்ளத்திஅ நெகிழ வைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கல்லலில் இருந்து தனது மனைவியுடன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார் முத்துகுமரின் அம்மா ஜெகதீசன். முத்துகுமரனின் அம்மா பேசியபோது " ஒரு சின்ன திருக்குறளை மனப்பாடம் செய்ய நான் எவ்வளவு கஷப்பட்டேன். ஆனால் என் மகன் எவ்ளோ படித்திருக்கிறான். எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார் என்று நினைக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது" என பேசினார்.
முத்துகுமரனின் தந்தை தனியார் பத்திரிகை நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசியபோது " ஆண் பெண் என எனக்கு இரண்டு பிள்ளைகள். குடும்ப சூழல் காரணமாக என்னால் அவனுடன் இருக்க முடியவில்லை . மலேசியா , சிங்கப்பூர் என வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்டேன். இன்று இந்த நிகழ்ச்சி மூலமாக அவர் எங்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார். ஆனால் பெற்றோர்களாக நாங்கள் அவனுக்கு எதுவுமே செய்யவில்லை என்கிற குற்றவுணர்ச்சி வருகிறது. என் மகன் எந்த வம்புக்கும் போக மாட்டான். அவன் வெளியே எப்படி இருப்பானோ அதே மாதிரிதான் உள்ளேயும் இருக்கிறான். அதனால் அவன் இந்த நிகழ்ச்சியில் நிச்சயம் வெற்றிபெறுவான் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. " என அவர் தெரிவித்தார்.