பிக் பாஸ் சீசன் -8 நிகழ்ச்சியின் 'Grand Finale' நாளுக்காக ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்னும் மூன்று நாட்களில் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. இந்த வாரத்திற்கான எவிக்சன் பற்றி பேசப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. 101- வது நாள் ஒளிப்பரப்பாக இருக்கிறது. நிகழ்ச்சியில் வெற்றி பெறபோவது யார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்க்கில் யார் வெற்றி பெறுவார்கள்? யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கிறது.
பணப்பெட்டி டாஸ்க்:
ஒவ்வொரு ரவுண்ட் இருப்பதாக ப்ரோவில் காட்டப்பட்டுள்ளது. முதல் பணப்பெட்டி போட்டியில் 30 மீட்டர் தொலைவில் ரூ.50,000 பணம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை 15 விநாடிகளில் எடுக்க வேண்டும் அறிவிக்கப்பட்டது. இந்த முறை முத்துக்குமரன் பணப்பெட்டியை எடுக்க முயற்சி செய்வதாக ப்ரோமோவில் கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் பணப்பெட்டியில், 45 மீட்டர் தொலைவில் ரூ.2,00,000 பணம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை 25 விநாடிகளில் எடுக்க வேண்டும் அறிவிக்கப்பட்டது.
அடுத்த ரவுண்டில் பணப்பெட்டியில், 60 மீட்டர் தொலைவில் ரூ.5,00,000 பணம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை 30 விநாடிகளில் எடுக்க வேண்டும் அறிவிக்கப்பட்டது. அடுத்த ரவுண்டில் பணப்பெட்டியில், 45 மீட்டர் தொலைவில் ரூ.2,00,000 பணம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை 25 விநாடிகளில் எடுக்க வேண்டும் அறிவிக்கப்பட்டது. இதை எடுக்க போட்டியாளர்கள் முயற்சி எடுக்கின்றனர்.
வெளியேறபோவது யார்?
பணப்பெட்டி டாஸ்க்கில் பணத்தை எடுத்துகொண்டு வீடு திரும்பாதவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என விதிமுறை.
முத்துக்குமரன், வி.ஜே. விஷால், ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா ஜனனி, ராயன் ஆகிய போட்டியாளர்களில் யார் இறுதிச்சுற்றுக்கு செல்ல இருக்கிறார்கள் என்று இன்று ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியில் தெரிய வரும். அப்படியிருக்கையில், ஜாக்குலின் பணப்பெட்டி டாஸ்க்கில் வீடு திரும்பாததால் விதிமுறைப்படி அவர் போட்டியிலிருந்து வெளியேறினார் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. சமூக வலைதளங்களில் இது குறித்து பலர் தகவல்கலை பகிர்த்து அவர்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். “ நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறிவிட்டீர்கள் என்பதை நம்ப முடியவில்லை. ஆனால், நீங்கள் மக்களால் வெளியேற்றப்படவில்லை என்பதே நீங்கள் சிறப்பாக விளையாடியதற்கான சாட்சி.” என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று வெளியாகியுள்ள புரோமோவில் 2 லட்சத்திற்கான பணப்பெட்டியை எடுக்க பவித்ரா, ஜாக்குலின் இருவரும் தங்களது விருப்பத்தை தெரிவிக்கின்றனர். அப்போது பவித்ரா, 'உள்ளவே வர முடியலைன்னா கூட பரவால ஜாக் நான் போறேன்' என்று சொல்கிறார். அதற்கு ஜாக்குலின் சரி என்கிறார். பவித்ராவை பணப்பெட்டி எடுக்க அனுமதிக்கிறார்.
'எல்லாரையும் ரெப்ரசண்ட் பண்ற பவி நீ. பணத்தை எடுத்திட்டு வந்திருவனு நம்பி நான் உனக்கு கொடுத்திருக்கேன்' என்று ஜாக்குலின் சொல்கிறார்.
பவித்ரா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீடு திரும்பினாரா? என்பது இனிதான் தெரிய வரும்?
இன்னொரு ப்ரோமோ வீடியோவில்,”பிக் பாஸ்.. இந்த வீட்டில் திரும்ப பார்க்க முடியாதோன்னு பயமாக இருக்கு.” என்று பணப்பெட்டியை எடுக்க செல்லும் முன் ஜாக்குலின் பேசியிருக்கிறார்.
80 மீட்டர் தொலைவில் 35 விநாடிகளில் பணப்பெட்டியை எடுக்க வேண்டும் அறிவிக்கப்பட்டது. வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஜாக்குலின் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீடு திரும்பவதாக இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் ஜாக்குலினை வரவேற்பதாக காட்சிகள் உள்ளன. ஆனால், ‘ முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்!’ என பிக் பாஸ் சொல்வது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இன்று ரூ. 8 லட்சம் கொண்ட பணப்பெட்டி வைக்கப்பட்ட நிலையில், கொடுக்கப்பட்ட நேரத்தை விட ஜாக்லின் 37 விநாடிகள் எடுத்துக் கொண்டதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் பரவி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் ஜாக்லின் வெற்றிப் பெறுவார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாக்குலின் வெளியேறினாரா அல்லது வெற்றி பெற்றாரா என்பது இனிதான் தெரியவரும்.
'பிக் பாஸ் Finale':
பிக் பாஸ் நிகழ்ச்சியில் Finale வரும் 17-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் யார் வெற்றி பெறுவார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். போட்டியாளர்கள் நீங்கள் யார் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?