நடிகர் ஆரவ் தனது உடல் எடையை குறைத்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில், "13 வருடங்களாக வொர்க் அவுட் செய்து கொண்டிருந்த என்னால், இந்த கொரோனா காலத்தில் வொர்க் அவுட் செய்ய முடியவில்லை. அதனால் 92 கிலோ வரை எடை கூடி விட்டது. என்னுடைய உடல் பலவீனமாக மாறியது. அதனால் மறுபடியும் என்னுடைய உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் மீண்டும் உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தேன். நான் டயட்டில் இருப்பதை போல, என்னுடைய குடும்பத்தினரும் டயட்டில் இருந்தனர். 6 மாதங்கள் விடாமல் உடற்பயிற்சி செய்தேன். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” என்று பேசியுள்ளார்.
பிரபல மாடலாக வலம் வந்த ஆரவ், மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி, சைத்தான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதனைத்தொடர்ந்து பிக்பாஸ் சீசன் ஒன்றில் டைட்டில் வின்னராக ஆனார். தற்போது அவர் மீண்டும் வா அருகில் வா படத்தில் நடித்து வருகிறார். நடிகை ராஹியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.