பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருக்கும் எழுத்தாளர் பவா செல்லத்துரையின் சம்பளம் பற்றிய தகவல்கள் இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் 7
பிக் பாஸ் சீசன் 7 நேற்று அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிக பிரபலமாகியுள்ள பிக் பாஸ் இதுவரை 6 சீசன்களைக் கடந்து, 7 ஆவது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மொத்தம் 18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறார்கள். மேலும் மக்களுக்கு சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு புதிய முயற்சிகள் இந்த சீசனில் எடுக்கப்பட்டிருக்கின்றன.
போட்டியாளர்கள்
போட்டியாளர்களைப் பொறுத்தவரை சினிமா, யூடியூப் என பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த நபர்கள் இந்த சீசனில் கலந்துகொண்டிருக்கிறார்கள். கூல் சுரேஷ், வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜய்குமார் , விக்ரம் திரைப்படத்தில் கமலுடன் நடித்த மாயா கிருஷ்ணன், வளர்ந்து வரும் நடனக் கலைஞர் ராப் பாடகர் நிக்ஸன், எழுத்தாளர் பவா செல்லத்துரை என பல தரப்பு மக்கள் கலந்துகொண்டிருக்கும் இந்த சீசன் நிச்சயம் பல விதமான தருணங்களை பார்வையாளர்களுக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
பவா செல்லத்துரை
இந்த போட்டியாளர்களில் மிக முக்கியமான ஒருவராக கருதப்படுபவர் எழுத்தாளர் பவா செல்லத்துரை. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் தனிப்பட்ட ரீதியாக நல்ல மதிப்பும் வைத்திருக்கும் ஒருவர் பவா செல்லத்துரை. புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு பவா செல்லத்துரை நல்ல பரிச்சயமான முகமாக இருந்தாலும் வெகு ஜனத்திற்கு அவரைப் பற்றி பெரிய அளவில் பரிச்சயம் கிடையாது.
பிக் பாஸ் வீட்டிற்குள் பவா செல்லத்துரை நுழைந்தபோது அனைவரும் யாரு இது? புதுசா இருக்காரு என்று பார்த்துகொண்டு இருக்கும்போது அவரை அடையாளம் தெரிந்து வரவேற்ற ஒரே நபர் நடிகை மாயா கிருஷ்ணன் மட்டும்தான். அதுவும் மாயா கிருஷ்ணன் நாடகத் துறை பின்னணியைச் சேர்ந்தவர் என்பதால் மட்டுமே. ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு பவா செல்லத்துரைக்கு வழங்கப்படும் சம்பளம் தெரிந்தால் அவர் கொஞ்சம் பெரியா ஆள்தான் யோசிக்க தோன்றும் .
ஒரு வாரத்திற்கு எவ்வளவு சம்பளம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் விஜய் டி வி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை போட்டியாளர்கள் மீறக்கூடாது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் சமூக அடையாளம் அவர்களுக்கு இருக்கும் புகழ் இவற்றை வைத்து ஒரு குறிப்பிட்டத் தொகை வாரவாரம் வழங்கப்படும்.
பிக் பாஸ் சீசன் 7 ஐ பொறுத்தவரை இந்த 18 போட்டியாளர்களில் எழுத்தாளர் பவா செல்லத்துரைக்கு இருப்பதிலேயே அதிக சம்பளம் தரப்படுவதாக இணையதளத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலின் படி ஒரு வாரத்திற்கு மட்டுமே ரூபாய் 1 முதல் 2 லட்சம் வரை ஒரு வாரத்திற்கு பவா செல்லத்துரைக்கு சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. பவா செல்லத்துரையைத் தொடர்ந்து நடிகை விசித்திரா அதிக சம்பளம் பெறும் போட்டியாளராக இருக்கிறார்.