பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை ஆயிஷா தனது காதலர் யார் என்பதை அறிமுகம் செய்துள்ளார். 


ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ஆயிஷா. சின்னத்திரையின் டாம்பாய் என அழைக்கப்படும் அவர் அந்த சீரியலில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றார். சத்யா சீரியலின் 2 சீசன்களும் சென்ற நிலையில், மற்ற மொழி சீரியல்களிலும் ஆயிஷா பிசியாக நடித்து வந்தார். 


இதனைத் தொடர்ந்து தான் ஆயிஷா சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சென்ற இந்த சீசனில் ஆயிஷா சக போட்டியாளரான சீரியல் நடிகர் அஸிமை செருப்பால் அடிக்கச் சென்ற காட்சிகள் பெரும் வைரலானது. 






அஸிம் அவரை வாடி, போடி என மரியாதைக்குறைவாக பேசியதால் பொறுமை இழந்த ஆயிஷா அப்படி நடந்துக் கொண்டு பின்னர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். 8வது வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக ரூ.12.50 லட்சம் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆயிஷா வெளியேறிய போது ஷிவின், அவரிடம் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுமாறு சொன்னார். இதனால் ஆயிஷா தற்போது யாரை காதலிக்கிறார் என்ற கேள்வி எழுந்தது. 


அதேசமயம் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன் ஆயிஷா பல நேர்காணல்களில் தனது முன்னாள் காதலன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இந்நிலையில் காதல் தினமான நேற்று தனது காதலர் யார் என்பதை ஆயிஷா வெளியுலகிற்கு அறிமுகம் செய்தார். 


யோகேஷ் என்பவரை தான் ஆயிஷா காதலித்து வருகிறார். விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. காதலர் தினத்தில் யோகேஷூடன் ரிசார்ட் ஒன்றில் டேட்டிங் சென்ற வீடியோவையும் ஆயிஷா வெளியிட்டுள்ளார்.