Pavani Reddy Covid Positive: அச்சச்சோ இப்போதான வெளியே வந்தாங்க..பிக்பாஸ் பாவனி ரெட்டிக்கு கொரோனா..!

பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்துகொண்ட பாவனி ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Continues below advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் ராஜு ஜெயமோகன், இமான் அண்ணாச்சி, பிரியங்கா, தாமரை செல்வி, அக்‌ஷரா, நிரூப், சிபி சந்திரன், வருண், ஐக்கி பெர்ரி, இசை வாணி உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். அமீர், சஞ்சீவ் உள்ளிட்டோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.

Continues below advertisement

இவர்களில் ராஜு, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் ஆகிய ஐந்து பேரும் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இந்த ஐந்து பேரில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னராகவும், பிரியங்கா ரன்னராகவும் வெற்றி பெற்றனர். மூன்றாவது வெற்றியாளராக பாவனி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பிக்பாஸ் சீசன் முடிந்த நிலையில், அண்மையில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களுடனும் பாவனி உரையாடினார். இதில் பிக்பாஸ் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.இந்த நிலையில் அவர் தற்போது தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின் படி பாதுகாப்பு நெறிமுறைகளோடு வீட்டில் என்னை நான் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டா லைவ் வீடியோ: -

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola