சேலத்தில் பிக் பாஸ் முத்துக்குமரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, தனக்கு சினிமா அறிவு இல்லை. கற்றுக் கொண்டு வருகிறேன் வாய்ப்பு கிடைத்தால் சினிமாவில் நடிப்பேன் என்று கூறினார்.
மொழி திணிப்பு குறித்த கேள்விக்கு, மொழி திணிப்பு என்பது இன்று நடைபெறுவது அல்ல. நூற்றாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. மொழிக்காக நாம் செய்த தியாகங்களும் போராட்டங்களும் அடுத்த 100 ஆண்டுகளுக்கும் செய்து கொண்டு தான் இருக்க வேண்டும். யார் என்ன செய்தாலும் தமிழ் தமிழ் தான் என்றார்.

இளைஞர்களுக்கு தமிழ் மீது ஆர்வம் உள்ளதா? என்ற கேள்விக்கு, தற்போது உள்ள தலைமுறைக்கு மொழி மீது ஆர்வம் உள்ளது. தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் சென்று பேசி வருகிறேன். தமிழ் மீது மாணவர்கள் கொண்டிருக்கும் அன்பையும், பிரியத்தையும், தன்னம்பிக்கையை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. இந்தி மொழியை யாராலும் திணிக்க முடியாது. அனைவரும் அனைத்து மொழியையும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் யாராலும் மொழியை திணிக்க முடியும். பாடல் விளையாட்டு போன்றவற்றை கற்றுக் கொள்வது போல மொழியையும் ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
பிக் பாஸில் வெற்றி பெற்ற பிறகு பல வாய்ப்புகள் வருகிறது. பலர் வாய்ப்பு கொடுக்கிறார்கள். பல துறைகளில் கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன் என தெரிவித்தார்.