சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டுமா? என்று பிக்பாஸ் நடிகை சனம் ஷெட்டி ஆவேசமாக பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சமீபகாலமாக நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஏற்கனவே சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தான் எதிர்கொண்ட சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். அதற்கு முன்னதாக குஷ்பு, ராதிகா, வரலட்சுமி, உள்ளிட்ட பல நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசியிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இப்போது பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டியும் தன் பங்கிற்கு அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி ஓபனாக பேசியுள்ளார்.
இது குறித்து சனம் ஷெட்டியில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: ஸ்ருதி நாராயணன் ஆடிஷன் வீடியோ இணையத்தில் லீக் ஆனது. அந்த வீடியோ இருந்தால் யாரும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உடனே டெலிட் பண்ணிடுங்கள். வியாபாரத்திற்காக இப்படி படுக்கைக்கு அழைக்கிறார்கள். சினிமா வாய்ப்பு என்றால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டுமா? இது கேவலமான ஒன்று.

பொதுவாக ஆணும், பெண்ணும் வீடியோ காலில் பேசும் போது ஆண் எதை வேண்டுமானாலும் கேட்கலாம், என்ன வேண்டுமென்றாலும் பேசிக் கொள்ளலாம். ஒரு இயக்குநரின் மேனேஜர் என்று சொல்லிக் கொண்டு அவர் ஒரு பெண்ணை எந்தளவிற்கு கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு சென்றிருக்கிறார். ஆடிஷனுக்கு வரும் பெண்களிடம் என்ன வேண்டுமானாலு கேட்கலாமா? அப்படி பல பெண்களின் கண்ணீரில் படங்கள் எடுத்து எத்தனை படங்களை ஹிட் கொடுக்க போகிறீர்கள்?
என்னைப் போன்று அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்ள மறுக்கும் பெண்களுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதுவே வாரிசு நடிகர், நடிகைகள், முன்னணி நடிகைகள், நம்பர் 1 நடிகைகளுக்கு என்று தானாகவே வாய்ப்புகள் தேடி வருகிறது. அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்பவர்களுக்கு மட்டுமின்றி அதற்கு சம்மதம் தெரிவிப்பவர்களும் தவறு செய்கிறார்கள்.
ஸ்ருதி நாராயணனின் வீடியோ ஏஐ மூலமாக உருவாக்கப்பட்டது என்று அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார். உண்மையில் அப்படி நடந்திருந்தால் இது குறித்து முதலில் அவர் புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால், அவர் செய்யவில்லை. என கேள்வி கேட்டுள்ளார். இந்த ஒற்றை கேள்வி பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. நெட்டிசன்கள் சிலர் அப்போ இது உண்மையான வீடியோவா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் ஸ்ருதிக்கு எதிராகவும் இந்த கேள்வி திரும்பி உள்ளதாகவே பார்க்க படுகிறது. மொத்தத்தில் ஸ்ருதிக்கு ஆதரவாக பேசுகிறேன் என்கிற நோக்கில், அவரை புது சிக்கலில் சிக்கவைத்து விட்டார் சனம்.
இந்த சம்பவம் பற்றி தொடர்ந்து பேசிய சனம், எங்களுக்கு சினிமாவில் பாதுகாப்பு தேவை. திறமைக்கு ஏற்ப சினிமா வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். அதன் பிறகு யாருக்கு யாருடன் தொடர்பு இருக்கிறது? யார் யாருடன் உறவில் இருக்கிறார் என்பது குறித்து விவாதிக்கலாம் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.