விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை லொஸ்லியா மரியநேசன். கொஞ்சும் இலங்கை தமிழ் பேசும் ஒரு  செய்திவாசிப்பாளராக நமக்கு அறிமுகமான இந்த பட்டாம்பூச்சி தற்போது சினிமாவிலும் மிகவும் பிரபலமான ஒரு முகமாக வளர்ச்சி கண்டுள்ளது. தமிழ் ரசிகர்களை மிகவும் எளிதாக கவர்ந்த லொஸ்லியா கூகுள் குட்டப்பா, பிரண்ட்ஷிப் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். 


 



 


யோகாவில் முழுமையான ஈடுபாடு :


இருப்பினும் பட வாய்ப்புகள் சற்று குறைவாகவே இருக்க தற்போது யோகாசனத்தில் முழு மூச்சாக இறங்கிவிட்டார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் லொஸ்லியா தனது உடலை வில் போல வளைத்து நெளிந்து யோகா செய்யும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். மேலும் மிகவும் மெலிந்து காணப்படும் லொஸ்லியா தற்போது கவர்ச்சியிலும் இறங்கி போட்டோக்களை தாறுமாறாக பகிர்ந்து இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சில படங்களில் நடித்திருந்தாலும் இன்றும் பிக் பாஸ் புகழ் லொஸ்லியா என்றே அறியப்படுகிறார். 


 






 


பன்ச் பேசும் லொஸ்லியா :


அந்த வகையில் தற்போது லொஸ்லியா மரியநேசன் மிகவும் கடினமான ஒரு யோகா ஆசனத்தை செய்யும் ஒரு புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு ஒரு பஞ்ச் குறிப்பும் பதிவிட்டுள்ளார். வெளிப்படையாக இருக்க அஞ்சாதீர்கள். உங்கள் மூளை ஒன்றும் கீழே விழுந்து விடாது என்று பதிவிட்டு தனது காலை வணக்கத்தை தெரிவித்துக்கொண்டுள்ளார் நடிகை லொஸ்லியா மரியநேசன். 


 






 


செங்கேணியுடன் ஜோடி :


ஜெய் பீம் திரைப்படத்தில், செங்கேணி வேண்டும் கதாபாத்திரத்தின் மூலம் தனது அபாரமான நடிப்பால் பாராட்டுகளை குவித்த மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ் மற்றும் பிக் பாஸ் பிரபலம் லொஸ்லியா மரியநேசன் இருவரும் இணைந்து "அன்னபூரணி" எனும் ஒரு திரில்லர் திரைப்படத்தில் நடிக்கின்றனர்.