Biggboss Dhanalakshmi: பிக்பாஸ் தனலட்சுமிக்கு அவரது அம்மா நோட்டீஸ்.. வீட்டை விட்டு துரத்தப்பட்டாரா.. பதிவால் குழப்பம்!

Bigg boss Dhanalakshmi :பிக்பாஸ் மூலம் பிரபலமான தனலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள போஸ்ட் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த ஏழு சீசன்களாக மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் போட்டியாளராக கலந்து கொண்டவர் தனலட்சுமி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் டிக் டாக், ரீல்ஸ் மூலம் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை பெற்று இருந்தார். சோசியல் மீடியாவில் இன்றும் ஆக்டிவாக இருக்கும் தனலட்சுமி தற்போது பகிர்ந்துள்ள போஸ்ட் ஒன்று அவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் குழப்பத்தையும் கொடுத்துள்ளது. 

Continues below advertisement

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பல பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் ஒரு சாதாரண பெண்ணாக என்ட்ரி கொடுத்து மற்ற போட்டியாளர்களுக்கு சரியான டஃப் கொடுத்தார் டிக் டாக் புகழ் தனலட்சுமி. ஆரம்பத்தில் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வந்த தனம், போகப்போக வெறுப்பை தான் சம்பாதித்தார். எதற்கு எடுத்தாலும் சண்டை, சின்ன சின்ன விஷயங்களைக் கூட வைத்து பெரிய அளவில் பிரச்னை ஏற்படுத்தி கூச்சல் போட்டு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களின் நிம்மதியைக் கெடுப்பது எனத் தொடர்ந்து செய்து வந்ததால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். 

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு தனக்கு சினிமா வாய்ப்புகள் வந்து குவியும் என அவர் போட்ட கணக்கு அனைத்தும் பொய்யாய் போனது. இருப்பினும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதும் அவ்வப்போது ஏதாவது போஸ்ட் போடுவதும் என பிஸியாகவே இருந்தார். சில சமயங்களில் கண் கலங்கி அழுவது போன்ற வீடியோக்களை பகிர்வது, மன வருத்தத்தில் போஸ்ட் போடுவது பின்பு டெலீட் செய்வது என ஏதாவது ஒன்றை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார் தனலட்சுமி. “தனம் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார், அதனால் தான் இது போல நடந்து கொள்கிறார்” என அவரின் ரசிகர்கள் நினைத்து வந்தனர். 

தற்போது தனலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தன்னுடைய அம்மா தன்னைத் தள்ளி வைத்து விட்டதாகவும், லீகல் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் கூறி பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 

 

"என்னுடைய அம்மா எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க. எனக்கும் அவங்களுக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லையாம். அவரின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ நான் இனி எங்கும் பயன்படுத்த கூடாது என அதில் குறிப்பிட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பதை இப்போது சொல்ல எனக்கு விருப்பமில்லை" என குறிப்பிட்டு போஸ்ட் செய்துள்ளார் தனலட்சுமி.

இந்நிலையில், அவரின் இந்த போஸ்ட் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மா - மகள் இடையே வக்கீல் நோட்டீஸ் அனுப்பி கொள்ளலாமா?  அதற்கு என்ன காரணமாக இருக்கும்? இப்படி பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் அவரின் ரசிகர்கள். இது ஒரு வேளை பிராங்காக கூட இருக்கலாம் என்பது சில நெட்டிசன்களின் கணிப்பு. 

Continues below advertisement
Sponsored Links by Taboola