பிக் பாஸ் போட்டியாளர் பூர்ணிமா ரவியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


பூர்ணிமா ரவி 


விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம்  ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பூர்ணிமா ரவி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி தொடக்கம் முதலில் வீட்டில் இருந்து வரும் பூர்ணிமா மாயாவுடன் இணைந்து சர்ச்சைகளிலும் சிக்கினார். எனினும், பூர்ணிமாவின் கேப்டன்சியை பிக்பாஸ் போட்டியாளர்கள் வரவேற்றனர். அதனால், இரண்டாவது முறையாக மீண்டும் பூர்ணிமா கேப்டனாக மாறினார். பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்ததாலும், விசித்ராவிடம் வம்பிழுத்ததாலும், அர்ச்சனாவுடன் சண்டைக்கு சென்றதாலும் பூர்ணிமா வைரலானார்.


அராத்தி என்கிற  யூடியூப் சேனல் மூலம் பிரபலமான பூர்ணிமா ரவி  குறும்படங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து  பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்னதாக நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி படத்தில்  சிறு கேரக்டரில் நடித்தார். இதேபோல், எம்.எஸ்.ராஜா இயக்கி இருக்கும் செவப்பி என்ற படத்தில் பூர்ணிமா ஹீரோயினாக நடித்துள்ளார். முட்டையில் செவப்பி என எழுதப்பட்டிருக்கும் இப்படம் ஆஹா ஓடிடி தளத்தி சமீபத்தில்  வெளியானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவரது இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வரும் பூர்ணிமா ரவி சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.