இந்தி , தமிழ் , தெலுங்கு , கன்னடம் என பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்து தொடங்கி ரசிகர்களிடம் பேசுபொருளாகியுள்ளன. இந்தியில் பிக்பாஸ் 19 ஆவது சீசன் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கியது. சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதே நேரம் தெலுங்கில் நாகர்ஜூனா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 9 ஆவது சீசன் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி துவங்க இருக்கிறது. கன்னடத்தில் கிச்ச சுதீப் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 12 ஆவது சீசன் செப்டம்பர் 28 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா
பிக்பாஸ் தமிழிலின் 9 ஆவது சீசன் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் துவங்க இருக்கிறது. இரண்டாவது ஆண்டாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த சீசனில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் பற்றி தெரிந்துகொள்ள ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படியான நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பிக்பாஸ் தமிழ் 9 ஆவது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மகனான ஶ்ரீகாந்த் தேவா தமிழ் சினிமாவில் 2000 ஆம் ஆண்டு முதல் இசையமைத்து வருகிறார். விஜயின் சிவகாசி , எம் குமரன் S/O மகாலட்சுமி , ஜித்தன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட்ட படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இவர் கருவறை என்கிற குறும் படத்திற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு தேசிய விருது வென்றுள்ளது குறிப்பிடத் தக்கது
பிக்பாஸ் தமிழ் 9 போட்டியாளர்
பிக்பாஸ் தமிழ் 9 ஆவது சீசனில் கலந்துகொள்ளப் போகும் போட்டியாளர்களின் பட்டியல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் ஒரு சில சமூக வலைதள பிரபலங்கள் மற்றும் சின்னத் திரை நடிகைகள் இந்த சீசனில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பலூன் அக்கா என சமூக வலைதளத்தில் வைரலான அரோரா , கூமாபட்டி தங்கபாணி ஆகியோர் இந்த சீசனில் போட்டியாளர்களாக எதிர்பார்க்கப்படுகிறார்கள். பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் இனியா , நடிகர் புவி அரசு , வினோத் பாபு , குக் வித் கோமாளி ஷபானா , ஃபரினா ஆஸாத் , வி.ஜே பார்வதி , மகாநதி சீரியல் நடிகை லக்ஷ்மி பிரியா , திருமணம் சீரியல் நடிகர் சித்து சித் ஆகியோர் இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.