பிரபல சின்னத்திரை நடிகையான திவ்யா கணேசன், தான் விமானத்தில் சென்றபோது நடந்த கசப்பான சம்பவம் பற்றி ஒரு நேர்காணலில் தெரிவித்திருப்பார். அதனைப் பற்றிக் காணலாம். 

Continues below advertisement

சின்னத்திரை ஏராளமான சீரியலில்களில் திவ்யா கணேசன் நடித்திருந்தாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்திருந்தார்.  அதனால் அவர் தன்னுடைய ஜெனி கேரக்டரில் கடைசி வரை முக்கியத்துவம் இல்லாமல் இருந்தாலும் நடித்திருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் தமிழின் 9வது சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக திவ்யா கணேசன்பங்கேற்றார். 

அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அவர் தான் வரப்போகிறார் என தகவல் பரவி வரும் நிலையில் திவ்யாவின் பழைய நேர்காணல் தொடர்ந்து வைரலாகி வருகிறது. அதில் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் பற்றி பேசியுள்ளார். அதாவது, “நான் ஷூட் முடித்து விட்டு ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் செல்லும்போது என்னுடைய பின்னாடி இருக்கையில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் இடுப்பில் கை வைத்தார். யாராவது இப்படி நடக்கும் என யோசித்து பார்த்திருப்போமா? சொல்லுங்கள். நான் சென்ற விமானம் மிகப்பெரியது. அதில் நான் தூங்கிக் கொண்டிருந்தேன்.

Continues below advertisement

பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. நான் பின்னாடி தள்ளி அமர்ந்திருந்தேன். எனக்கு பின்னாடி அந்த நபர் மட்டும் தான் இருக்கிறார். இரண்டு, மூன்று முறை என்மீது அவரின் கைபட்டது. நான் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் முதலில் தெரியவில்லை. ஏதோ பூச்சியாக இருக்குமோ என நினைத்தேன். ஒரு பெண் மீது கை வைக்க என்ன மாதிரி ஒரு தைரியம் இருந்திருக்கும். 

நான் ஒவ்வொரு முறையும் அசௌகரியப்பட்டு எழுந்திருக்கும்போதும் அந்த நபர் ஆழ்ந்த தூக்கத்தில் தான் இருந்தார். அதனால் எனக்கு அந்த நபர் மீது எவ்வித சந்தேகமும் வரவில்லை. இருந்தாலும் ஒரே இடத்தில் பூச்சி தொல்லை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்தது. என்னவாக இருக்கும் என பார்க்க சற்று சாய்ந்து தூங்குவது போல நடித்து கண்காணித்தேன். அப்போது தான் அந்த நபரின் கை என்பது தெரிய வந்தது. இதனைக் கண்டு ஒரு பக்கம் அதிர்ச்சி, இன்னொரு பக்கம் பயங்கர கோபம் வந்தது. 

சற்றும் தாமதிக்காமல் அந்த நபரின் கையை பிடித்து இழுத்து பளார் என 4 அடி கொடுத்தேன். இந்த மாதிரி விஷயங்களில் பெண்கள் பயப்பட தேவையில்லை.தைரியமாக செயல்பட வேண்டும் எனவும் திவ்யா கணேசன் தெரிவித்திருப்பார். இந்த விஷயத்தில் தைரியமாக செயல்பட்ட திவ்யாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.