இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. எங்கு பார்த்தாலும் காசிப் யாரை பார்த்தாலும் காசிப். அப்பப்பா!!! காலை வந்தாலே விசித்திராவின் ஆட்டம் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை வம்புக்கு இழுப்பதாக தான் இருக்கும். ஆனால் இன்று சற்று வித்தியாசமாக அன்பாக மாயா மற்றும் அக்ஷயாவிடம் பேச பதிலுக்கு மாயாவும் போலியான பாசத்தை பொழிந்து கொள்கிறார்கள். ஆனால் பின்னால் சென்று தாறுமாறாக பேசிக்கொள்கிறார்கள்.
இந்த சீசன் விஷ பாட்டில் :
நேற்றைய எபிசோட் வரை பாவம் இந்த பொண்ணு மத்தவங்க பேசுறதை பார்த்துவிட்டு பேசுது என ஐஷுவை நினைத்தால் இன்று அந்த நினைப்பு அப்படியே பொய்யாக்கி விடுகிறார். பயங்கரமாக ஏத்தி விடும் ஐஷு தான் இந்த சீசன் விஷ பாட்டில். விசித்திரா முதல் மணி - ரவீணா வரை ஐஷு பழைய கதைகளை எல்லாம் நோண்டி நோண்டி கன்டென்ட் கொடுப்பது தேவையில்லாதது என்பது தான் ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ்.
தெகிட்டும் மணி - ரவீணா கன்டென்ட் :
மணி - ரவீணா லவ் டாபிக் பற்றியே அனைவரும் பேசி பேசி நோகடிக்கிறார்கள். அவர்கள் இருவரும் தெளிவாக சொல்லியும் மறுபடியும் கிளறிக்கொண்டே இருப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது. பாவம் ரவீணா இதில் மாட்டிக்கொண்டு முழிக்கிறாள்.
ஊர் கிழவி மாயா:
மாயா செய்யும் வேலையெல்லாம் எல்லா ஊர்களிலும் இருக்கும் ஊர் கிழவி செய்வது போல இருக்கிறது. மாயா எப்போதும் "வச்சு செஞ்சுறலாம்" என சொல்வதற்கு என்ன அர்த்தம் என புரியவில்லை. அதே போல எப்ப பார்த்தாலும் நான் கிளம்பி போய்கிட்டே இருப்பேன் என சொல்லிக்கொண்டே இருக்கிறார். அவ்வளவு எளிதாக பிக் பாஸ் வீட்டில் இருந்து நினைத்தவுடன் சென்று விட முடியமா என தெரியவில்லை.
தெரிந்தே விளையாடும் போட்டியாளர்கள் :
விக்ரமும் மணியும் பேசிக்கொள்கையில் ஜோவிகா, பிரதீப், கூல் சுரேஷ், யுகேந்திரன் இவர்கள் அனைவரும் நல்ல பிளேயர்கள் என பேசிக்கொள்கிறார்கள். போட்டியாளர்கள் அனைவரும் கேம் என்ன எப்படி விளையாடனும் என நன்றாக தெரிந்து தான் விடுகிறார்கள். இருப்பினும் பயங்கரமாக தவறான வார்த்தைகள் ஒரு நேஷனல் தொலைக்காட்சியில் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.
பொறுமையை சோதித்த ஆரியமாலா:
டாஸ்க் என்ற பெயரில் சகிப்புத்தன்மையை சோதிக்கும் வகையில் யுகேந்திரன், ரவீணா மற்றும் விசித்திரா கலந்து கொண்டு டார்ச்சரில் வெற்றியும் பெறுகிறார்கள். "ஆரியமாலா... ஆரியமாலா..." என தொடர்ந்து நான்கு மணிநேரம் அந்த பாடலை கேட்டு அசத்தி விட்டனர்.
வினுஷா மற்றும் அக்ஷயாவுக்கு அர்ரெஸ்ட் வாரண்ட்டை ரத்துசெய்த பிக்பாஸ் வரும் வாரங்களில் அவர்களின் விளையாட்டை ஸ்வாரஸ்யமாக விளையாட ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார்.
இதுதான் பிக் பாஸ் வீட்டில் 12 நாள் நடைபெற்ற சம்பவங்கள்...