பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் வேளையில் இப்போட்டியில் முதல் வாரத்தில் இருந்தே ஸ்வாரஸ்யம் குறைவாக இருக்கும் போட்டியாளர் என்ற முத்திரையோடு அடிக்கடி நாமினேஷனில் சக போட்டியாளர்களால் குறிப்பிடப்படுபவர் அக்ஷயா உதயகுமார். ஒரு முறை அதை காரணம் காட்டி ஜெயிலுக்கு எல்லாம் அனுப்பினார்கள் சக போட்டியாளர்கள். இருப்பினும் நடுநிலையாக சிறப்பாக விளையாடி  கொண்டு இருக்கிறார் அக்ஷயா உதயகுமார். 


கேரளாவை பூர்வீகமாக கொண்ட அக்ஷயா ஒரு தேர்ந்த நடன கலைஞர். அவருக்கு நடிப்பு, மாடலிங் மீதும் மிகுந்த ஆர்வம் இருந்தது. அதன் காரணமாக ஏராளமான போட்டோ ஷூட் எல்லாம் நடத்தி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் உள்ளார்.  



மாடலிங் மூலம் பல படவாய்ப்புகள் அக்ஷயாவுக்கு அமைந்தது. மலையாளத்தில் சித்தி, ஹயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு சில ஷார்ட் பிலிம்களில் கூட நடித்துள்ளார். தமிழ் ரசிகர்களுக்கு அக்ஷயா நடித்த முதல் படமே நல்ல வரவேற்பு கிடைத்தது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான 'லவ் டுடே' படத்தில் ஹீரோயின் இவானாவின் தங்கையாக அக்ஷயா நடித்திருந்தார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே தோன்றி இருந்தாலும் ரசிகர்களின் கவனம் பெற்றார். 


தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு  சிறப்பாக விளையாடி வருகிறார். அக்ஷயாவின் அப்பாவும் அம்மாவும் அக்ஷயா குறித்து பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 


அக்ஷயாவின் அம்மா பேசுகையில் "கொரோனா காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகள் அனைவருமே வீட்டுக்குள் முடங்கிப்போனார்கள். அந்த சமயத்தில் அக்ஷயா ஏராளமான ரீல்ஸ்களை எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அது வீட்டில் இருந்த ஒரு சில இயக்குநர்கள் கண்ணில் பட்டு விட்டது போல அதன் மூலம் அவளுக்கு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது" என கூறி இருந்தார். 


 



அக்ஷயாவின் பெரும்பாலான ரீல்ஸ்களில் அக்ஷயாவுடன் அதிகமாக காணப்படும் அபிஷேக் யார் என பலருக்கும் சந்தேகம் இருக்கும். அவர் அக்ஷயாவின் சகோதரர் அபிஷேக்.  அவரும் ஒரு சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


பிக் பாஸ் 7 சீசன் முடிந்த பிறகு அக்ஷயாவுக்கு பல பட வாய்ப்புகள் நிச்சயம் குவியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.