Bigg Boss 6 Tamil: விக்ரம்.. அஸீம்.. ஷிவின்.. இதுவரை இவர்கள் பயணம் எப்படி..? மகுடம் சூட தகுதியானவர் யார்..?

100 நாட்களை கடந்து வெற்றிகரமாக பிக் பாஸ் வீட்டில் பயணித்து பைனல்ஸ் மேடையேறவிற்கும் டாப் 3 போட்டியாளர்களின் பயணம் எப்படிப்பட்டது. யார் டைட்டில் ஜெயிக்க தகுதியானவர்?

Continues below advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்றில் போட்டியிடும் மூன்று போட்டியாளர்கள் அசீம், ஷிவின் மற்றும் விக்ரமன். இவர்களின் பயணம் குறித்து பார்க்கலாம். 

Continues below advertisement

 

21 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல போட்டிகள், தடங்கல்கள், சண்டை சச்சரவுகளை தாண்டியும் இருந்து போட்டிக்கு தகுதியான ஐந்து பேரில் கதிரவன், அமுதவாணன் பண பெட்டியுடன் வெளியேற மைனா நந்தினியும் நேற்று நள்ளிரவு திடீரென பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். எனவே தற்போது அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் தான் பைனல்ஸ் மேடையேற உள்ள டாப் 3 போட்டியாளர்கள். எனவே இவர்கள் மூவரின் பிக் பாஸ் பயணம் குறித்து பார்க்கலாம். 

அசீம் : 

பிக் பாஸ் வீட்டில் நுழைந்ததில் இருந்தே சண்டை சச்சரவு எங்காவது நடந்தால் அதில் ஒரு பங்காக நிச்சயமாக இருப்பார் அசீம். ஏராளமான ரசிகர் பட்டாளம் இவருக்கு இருந்தாலும் இப்படி ஒரு டாக்ஸிக் ஆளை இதுவரையில் பார்த்ததில்லை என்ற கருத்தும் பரவலாக பார்வையாளர்களின் மத்தியில் உள்ளது. உரக்க பேசினால் எல்லோரும் அடங்கி விடுவார்கள் என்ற எண்ணமா என தெரியவில்லை.

எந்த ஒரு பேச்சையாக இருந்தாலும் சுமுகமாக அதை பேசி தீர்க்காமல் கத்தி கூச்சலிட்டு திசை திரும்புவதை ஒரு வாடிக்கையாக கொண்டிருந்தார் அசீம். எதற்கு எடுத்தாலும் கோபப்படும் அசீம் அதை உடனே மறந்து சகஜ நிலைக்கு செல்வதும் அக்கறையோடு பேசுவது அவரிடம் இருக்கும் ஒரு நல்ல குவாலிட்டி. கேப்டனாகவும் இருந்துள்ள அசீம் டாஸ்க்கில் சொதப்பியதற்காக ஜெயிலுக்கும் சென்றுள்ளார். எதற்கு எடுத்தாலும்  சண்டையிடும் அசீம் டாஸ்க் சமயத்தில் மட்டும் சும்மா இருப்பாரா என்ன..? அங்கும் தொடரும் சண்டை. 

 

அசீமுகேன ஒரு பி.ஆர் டீம் வெளியில் பயங்கரமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். அதை வைத்தே அவர் ஒவ்வொரு முறை நாமினேட் செய்யப்படும் போதெல்லாம் அதிகமான வாக்கு எண்ணிக்கைகளை பெற்று தப்பித்து வந்தார். அவர்களை தாண்டியும் இன்ப்ளூவென்ஸ் ஆகாமல் இருக்கும் பிக் பாஸ் ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். நிச்சயமாக அவர்களின் ஒட்டு தகதியானவருக்கே செல்லும் என்பதில் சந்தேகமில்லை. 


விக்ரமன் :

அரசியல் பின்னணியில் இருந்து வந்த விக்ரமனுக்கும் அசீமை போலவே ஏராளமான பி.ஆர். வேலைகள் வெளியில் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் இதுவரையில் ஐந்து சீசன்களிலும் பங்கேற்ற  போட்டியாளர்களில் சற்று வித்தியாசமானவர் விக்ரமன் என்பது பெரும்பான்மையான பார்வையாளர்களின் கருத்து. 100 நாட்களையும் கடந்து பிக் பாஸ் வீட்டினுள் இருக்கும் விக்ரமன் இது வரையில் யாரையும் இழிவாக பேசியது கிடையாது. அவரை யாராவது வார்த்தையால் தாக்கினாலும் அவர்களை எதிர்கொள்ளும் விதமே வேறு. இப்படி பல நல்ல குவாலிட்டிகளை கொண்டவர் விக்ரமன். அனைத்து டாஸ்க்கிலும் சிறப்பாக பங்கேற்றார். 


ஷிவின் :

ஒரு திருநங்கையாக கடந்த சீசன் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழைந்த நமீதா மாரிமுத்து ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேற 100 நாட்களையும் தாண்டி சிறப்பாக பிக் பாஸ் வீட்டினுள் பயணம் செய்து இறுதி சுற்றில் இடம்பெற்று இருக்கும் ஷிவினின் பயணம் மிகவும் இன்ஸ்பைரிங்கானது. இதற்கு முக்கியமான காரணம் அவரின் திறமையான கேம் பிளான்.

இப்படி கூட கேம் விளையாடலாமா என மற்ற போட்டியாளர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருந்தவர். தன்னை ஒரு திருநங்கையாக இந்த சமூகம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை காட்டிலும் தன்னை மற்ற பெண்களை போலவே பார்க்க வேண்டும் என்ற  அவரின் ஆசையை இந்த நிகழ்ச்சி மூலம் நிறைவேற்றிக் கொண்டார். மற்றவர்களை விட ஷிவின் தான் இந்த டைட்டில் ஜெயிக்க மிகவும் தகுதியானவர் என்பது தான் பார்வையார்களின் பொதுவான கருத்து. 

Continues below advertisement
Sponsored Links by Taboola