Bigg Boss 6 Tamil: என்னது பூட்டு இல்லையா.. கமலை கதறவிட்ட ஜிபிமுத்து.. தரமான சம்பவம்! -வீடியோ
Bigg Boss 6 Tamil : கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் தொடங்கியது.
ABP NADULast Updated: 09 Oct 2022 10:30 PM
Background
Bigg Boss 6 Tamil: உலகின் மிகவும் அதிகமாக கவனிக்கப்படக்கூடிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் தமிழ் வெர்சன் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இன்று இரவு...More
Bigg Boss 6 Tamil: உலகின் மிகவும் அதிகமாக கவனிக்கப்படக்கூடிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் தமிழ் வெர்சன் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இன்று இரவு முதல் ஒளிபரப்பப்பட இருக்கிறது. இன்றைய முதல் நாளில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸில் பங்கேற்கும் போட்டியாளர்களை ஒவ்வொரு நபராக அறிமுகம் செய்து வைத்து பிரமாண்ட வீட்டுக்குள் அனுப்பி வைப்பார். அதன் தொடர்ச்சியாக போட்டியாளர்கள் தாங்கள் யார்..? தங்களது பின்புலம் என மேடையில் தாங்கள் அடையபோகும் எதிர்கால கனவு குறித்து தெரிவித்து வீட்டுக்குள் செல்வார்கள். இப்படி பிக்பாஸ் சீசன் 6 ஸின் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்று ஓரளவு கணித்த பொதுமக்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் இந்த பிரபலம்தான் பங்கேற்கிறார். இதோ அவர், இவர் என்று ஒவ்வொருவராக வரிசைப்படுத்தி வந்தனர். உங்கள் கணிப்பு சரியா..? தவறா..? என்பதை சொல்ல இதோ நாங்கள் வந்துவிட்டோம். நேற்று நடந்த சூட்டிங்கின்படி, இதுவரை 13 போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 6 வீட்டிற்குள் சென்று இருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்பதை அ முதல் ஃ வரை வரிசையாக காணலாம். பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் விவரம்: முதல் போட்டியாளர் - ஜி பி முத்து (டிக்டாக் பிரபலம்)2வது போட்டியாளர் - முகமது அஸீம் (சின்னத்திரை நடிகர்)3வது போட்டியாளர் - அசால் கோலார் (ஜோர்தாலே பாடல் புகழ்)4வது போட்டியாளர் - ஷிவின்கணேசன் (திருநங்கை, ஐடி துறை)5வது போட்டியாளர் - ராபர்ட் மாஸ்டர் (நடன இயக்குநர்)6வது போட்டியாளர் - ஷெரினா (மாடல்)7வது போட்டியாளர் - ராம் ராமசாமி (தமிழ்நாடு கிரிக்கெட் வீரர், நடிகர்)8வது போட்டியாளர் - ADK (ஸ்ரீ லங்கா ராப்பர்)9வது போட்டியாளர் - ஜனனி (தொகுப்பாளினி)10வது போட்டியாளர் - அமுதவாணன் (விஜய் டிவி புகழ்)11வது போட்டியாளர் - மகேஸ்வரி (விஜே)12வது போட்டியாளர் - கதிர் (ஜி தமிழ் விஜே)13வது போட்டியாளர் - ஆயிஷா (சின்னத்திரை நடிகை)மொத்தம் 16 பேர் கொண்ட போட்டியாளர்களில் 13 பேர் யார் என்ற அதிகாரபூர்வமாக தெரிந்துவிட்டது. மீதமுள்ள 3 பேர் இன்று இரவு நடக்கும் துவக்க விழாவிற்கு பிறகு தெரியவரும்.
தொழில்முறை நடனக் கலைஞராக உள்ள மணிச்சந்திரா மணி மானாட மயிலாட சீசன் 10 மற்றும் ஜோடி சீசன் 9 , கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 1 ஆகிய ரியாலிட்டி நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் தற்போது பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டுள்ளார்.
Bigg Boss 6 Tamil: 16வது பிக்பாஸ் போட்டியாளராக களம் கண்ட சின்னத்திரை பிரபலம் “விஜே மகேஸ்வரி”
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக விஜே மகேஸ்வரி கலந்து கொண்டுள்ளார். தொகுப்பாளினியாக தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கிய அவர் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி மனைவிகளில் ஒருவராக நடித்துள்ளார்.
Bigg Boss 6 Tamil: பிக்பாஸ் வீட்டுக்குள் களமிறங்கிய விஜய் டிவி பிரபலம் “அமுதவாணன்” ..!
விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு, ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான அமுதவாணன் பிக்பாஸ் போட்டியாளராக இம்முறை களமிறங்கியுள்ளார். ஒவ்வொரு சீசனிலும் களமிறக்கப்படும் காமெடி நடிகர்கள் வரிசையில் இம்முறை அமுதவாணன் பங்கேற்றுள்ளார்.
“தமிழ் உணர்வு இருந்தாலே அவங்க தமிழர்கள்தான்” - சீரியல் நடிகருக்கு கமல் கொடுத்த நச் அறிவுரை!
“தமிழ் உணர்வு இருந்தாலே அவங்க தமிழர்கள்தான்” என்று கூறி சீரியல் நடிகருக்கு கமல் அறிவுரை கூறியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போது தனிமைப்படுத்துதல் வரை சென்று விட்டு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் வந்த சீரியல் நடிகர் முகம்மது அஸீம் 4வது போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அவர் மேடையில் வந்த போது தமிழர்கள் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்தார். அதில் வெளிநாட்டில் பிறந்தாலும் தமிழன் தமிழன் தான்.. இங்கே அயல்நாட்டுக்காரன் பிறந்தாலும் அயல்நாட்டுக்காரன்தான் என கூற கமல்ஹாசன் அதனை மறுத்து பதில் கருத்து தெரிவித்தார்.
அவர் இங்கே அயல்நாட்டுக்காரன் பிறந்தாலும் அயல்நாட்டுக்காரன் என்று சொல்கிறீர்களா.. சின்ன திருத்தம் தமிழ் உணர்வு யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் எல்லோருமே தமிழர்கள்தான் என பதிலடி கொடுத்துள்ளார்.
என்னது பூட்டு இல்லையா.. கமலை கதறவிட்ட ஜிபிமுத்து.. தரமான சம்பவம்! -வீடியோ
பிக்பாஸ் வீட்டிற்குள் கமல்ஹாசனுக்கும், ஜிபி முத்துவுக்கும் இடையே நடந்த உரையாடல் இணையத்தை கலக்கிக்கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜிபி முத்து அறைக்குள் எப்படி செல்வது என தெரியாமல் திணறுகிறார். அவரை கமல் ஆசுவாசப்படுத்தி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்ப வழி செய்கிறார். இந்த நகைச்சுவை நிறைந்த உரையாடல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6 -ல் மணிகண்ட ராஜேஷ் பங்கேற்று உள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ் அவள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் உட்பட சில ரியாலிட்டி ஷோக்களில் தோன்றியுள்ளார். இவர் 8 வது போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.