Bigg Boss 6 Tamil : ஜனனியா? ஏடிகே வா..? - இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

ஜனனி அதிர்ஷட வசமாக தப்பித்து வருகிறார் என்று பல சக போட்டியாளர்கள் அவருக்கு பட்டம் கட்டினர். அதனால், இம்முறை ஜனனி வெளியேற அதிக வாய்ப்புள்ளது .

Continues below advertisement

இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று எவிக்‌ஷன் நாமினீஸ்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

கடந்த வாரத்தில், இந்த சீசனின் டபுள் எவிக்‌ஷன் நடந்தது. ராம் மற்றும் ஆயிஷா குறைந்த ஓட்டுகளை பெற்று இருந்தனர். அதனால், ஆயிஷாவின் ரசிகர்கள் பலர் அவரை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வந்தனர். ஆயிஷா ஒரு சிறந்த போட்டியாளர் என்றும் அவர் உள்ளே இருக்க தகுதியானவர் என்றும் ட்வீட் செய்து அவருக்காக வாக்குகளை சேமித்து வந்தனர். இப்படியாக ஆயிஷாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தாலும், வாக்குகளில் எந்தவொரு பெரிய மாற்றமும் காணப்படவில்லை. ஆகையால் ராம் மற்றும் ஆயிஷா குறைந்த ஓட்டுகளை பெற்று வெளியேற்றப்பட்டனர்.

தற்போது இந்த வாரத்தில், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா  ரச்சித்தா மற்றும் விக்ரமன் ஆகியோர் எவிக்‌ஷன் நாமினீஸ்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், அதிக ரசிகர்களையும் ஆர்மிகளையும் வைத்திருக்கும் ஜனனியை, அதிர்ஷட வசமாக தப்பித்து வருகிறார் என்று பல சக போட்டியாளர்கள் அவருக்கு பட்டம் கட்டினர். அதனால், இம்முறை ஜனனி வெளியேற அதிக வாய்ப்புள்ளது. இவர் எலிமினேட் ஆகவிட்டால், அதிகமாக புறம் பேசிவரும் ஏடிகே வெளியேற வாய்ப்புள்ளது. நேற்று வெளியான ப்ரோமோவில் கூட, அஸிமை பற்றி விக்ரமனிடம் புறம் பேசி மைண்ட் கேம் ஆடிவருகிறார் ஏடிகே.


எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் :

இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியேறினார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் ஆனார். ஐந்தாம் வாரத்தில் நிவாஷினி வெளியேற ஆறாம் வாரத்தில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார். ஏழாம் வாரத்தில் குயின்ஸி வெளியேற்றப்பட்டார். கடந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷனில் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேறினர்.

எஞ்சிய போட்டியாளர்கள் :

இவர்கள் சென்ற பின், திருநங்கை ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அஸிம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், விஜே கதிரவன், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன், ஜனனி  மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 11 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Continues below advertisement
Sponsored Links by Taboola