Bhavatharini Death LIVE: நல்லடக்கம் செய்யப்பட்ட பவதாரிணியின் உடல்; சோகத்தின் உச்சத்தில் ராஜா குடும்பம்
Bhavatharini Death LIVE Updates: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணி கல்லீரல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.
மறைந்த பாடகி பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது. பவதாரிணியின் உடலை இயக்குநர் அமீரும் தூக்கிச் சென்றார்.
பவதாரிணியின் இறுதிச் சடங்கில் ரவீந்திரநாத் கலந்து கொண்டனார்.
நல்லடக்கம் செய்வதற்காக பவதாரிணியின் உடல் இளையராஜாவின் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
பவதாரிணியின் இறுதிச் சடங்கில் இயக்குநரும் நடிகருமான அமீர் கலந்து கொண்டுள்ளார்.
பவதாரிணியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றது. அனைவரும் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக எடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த பாடகி பவதாரிணியின் தந்தையான இளையாராஜாவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆறுதல் கூறி வருகின்றார்.
பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வந்துள்ளார்.
பவதாரிணியின் உடலுக்கு அருகில் இளையராஜா அமர்ந்து கொண்டு பவதாரிணி முகத்தையே பார்த்துக்கொண்டு உள்ளார்.
பவதாரிணியின் உடலுக்கு இளையராஜா இறுதி சடங்குகளை செய்து வருகின்றார்.
அக்கா பவதாரிணியின் உடலுக்கு அருகில் யுவன் சங்கர் ராஜா பெரும் சோகத்துடன் நின்று கொண்டு உள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள பவதாரிணியின் உடலுக்கு பொதுமக்களும் இளையராஜாவின் உறவினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த பவதாரிணியின் உடல் பண்ணைபுரத்தின் இளையராஜாவின் பண்ணை வீட்டில் ஏற்கனவ அடக்கம் செய்யப்பட்டுள்ள இளையராஜாவின் தயார் மற்றும் மனைவியின் உடலுக்கு அருகில் பவதாரிணியின் உடலும் அடக்கம் செய்யப்படவுள்ளது.
பவதாரிணியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான இறுதிகட்ட பணிகள் பண்ணைபுரத்தில் உள்ள வீட்டில் நடைபெற்று வருகின்றது.
தன் மகள் பவதாரணி உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் பவதாரிணி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தேனி லோயர் கேம்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள பவதாரிணி உடலுக்கு பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், டிரம்ஸ் சிவமணி, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த பாடகி பவதாரிணி உடலை பார்த்து இயக்குநர் பாரதிராஜா கதறி அழுதார். முன்னதாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், “என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்.. மகள் பவதாரிணியின் மறைவு, எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்” என தெரிவித்திருந்தார்.
தேனி பண்ணைப்புரத்தில் இன்னும் சற்று நேரத்தில் பாடகி பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது உடலுக்கு திருவாசகம் பாடி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் பண்ணைபுரத்துக்கு பிரபல பாடகி பவதாரிணி உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இளையராஜாவின் உறவினர்கள், ஊர் மக்கள் அஞ்சலி செலுத்திய பின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
மறைந்த பாடகி பவதாரிணி உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்ப் பகுதிக்கு இன்னும் சற்று நேரத்தில் வரவுள்ளது. அங்குள்ள இளையராஜா அவர்களின் தாயார் மற்றும் துணைவியாரின் நினைவிடமாக உள்ள இளையராஜா பாடசாலை என்னும் இடத்தில் இன்று அவரது மகளான பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
பாடகி பவதாரிணி உடல் தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் உள்ள இளையராஜாவுக்கு சொந்தமான நிலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. நண்பகல் 12 மணியளவில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தகவல்
இளையராஜாவின் தாய் மற்றும் மனைவி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தான் பவதாரிணியின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இசைஞானி இளையராஜா மகள் பவதாரிணி உடல் சென்னை தியாகராகநகரில் இருந்து தற்போது தேனிக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைந்தது இளையராஜாவுக்கு மட்டும் இல்லாமல் இசைப்பிரியர்களுக்கு மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இசைஞானி இளையராஜா மகள் பவதாரிணி உடலுக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மகன் அஞ்சலி செலுத்தினார்.
பிரேமலதா , சண்முக பாண்டியன் , விஜயபிரபாகரன் ஆகியோர் பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகை தந்தனர்.
பவதாரிணி இறப்புச் செய்தி நம்ப முடியாத ஒன்று. அவருடைய இழப்பு தமிழ் சினிமாவிற்கு ஒரு மாபெரும் இழப்பு. இந்த நேரத்தில் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
மறைந்த பாடகி பவதாரிணிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பினார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
மறைந்த பாடகி பவதாரிணிக்கு அஞ்சலி செலுத்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வந்துள்ளார்.
மறைந்த பாடகி பவதாரிணிக்கு அஞ்சலி செலுத்த நடிகர் சிலம்பரசன் வருகை தந்துள்ளார்.
எமனுக்கு என்ன வேண்டும் எனத் தெரியவில்லை. திரையுலகில் இருந்து ஒவ்வொருவரையும் அபகரித்துக்கொண்டுள்ளார். மனைவியை இழந்து வாடும் இளையராஜா சாருக்கு மகள் துணையாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் இறந்தது பேரதிர்ச்சி. இந்த சோகத்தை தாங்கும் பலத்தை இறைவன் இளையராஜா சார் குடும்பத்திற்கு தரடும் என ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார்.
பாடகி பவதாரிணியின் மறைவு இளையராஜாவின் குடும்பத்திற்கு மட்டுமல்ல இசையுலகத்திற்கும் மிகப்பெரிய இழப்பு என பவதாரிணியின் உடலுக்கு இயக்குநர் வெற்றிமாறன் அஞ்சலி செலுத்திய பின்னர் தெரிவித்தார்.
சமீபத்தில் எனது மகளின் பிறந்த நாளுக்கு ராஜா சாரிடம் வந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றேன். யுவன் சங்கர் ராஜா தம்பி மாதிரி. அவரும் நானும் ஒன்றாக பணியாற்றியுள்ளோம். கொஞ்ச நாட்களுக்கு முன்னர்தான் யுவனின் தயார் மறைந்தார். தற்போது அவரது சகோதரி. இந்த நிலையை எதிர்கொள்ளும் மனபலத்தை இறைவன் அவர்களுக்கு கொடுக்கட்டும் என பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் இயக்குநர் மோகன் ராஜா பேசியுள்ளார்.
மறைந்த பாடகி பவதாரிணிக்கு அஞ்சலி செலுத்த நடிகர் ஆனந்த் ராஜ் வந்துள்ளார்.
மறைந்த பாடகி பவதாரிணிக்கு அஞ்சலி செலுத்த இயக்குநர் மோகன் ராஜா இளையராஜா வீட்டிற்கு வந்தார்.
பவதாரிணிக்கு தனது இறுதி மரியாதையை செலுத்த வந்தார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.
பவதாரிணியின் உடலுக்கு நடிகர்கள் விஷால், கார்த்திக், ஆகியோர் அஞ்சலி செலுத்த வந்தனர்.
பவதாரிணியின் குரல் தாயின் வருடலைப் போல் இருக்கும். இந்தியாவில் யாருக்கும் இல்லாத குரல் பவதாரிணியின் குரல். சோகத்தில் மூழ்கியுள்ள இளையராஜாவை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியவில்லை என இயக்குநர் களஞ்சியம் தெரிவித்துள்ளார்.
பவதாரிணியின் உடலுக்கு இறுதி மரியாதையை செலுத்த திரைப்பிரபலங்கள் இளையராஜாவின் வீட்டிற்கு வந்தவண்ணம் உள்ளனர்.
மறைந்த பாடகி பவதாரணியின் உடலுக்கு இயக்குநர் தங்கர் பச்சன் தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.
நடிகர் ராமராஜன் மறைந்த பாடகி பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த பாடகி பவதாரிணிக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்த இயக்குநர் வெற்றி மாறன் இளையராஜா வீட்டிற்கு வந்துள்ளார்.
பவதாரிணியின் உடலுக்கு பொதுமக்களும் ரசிகர்களும் வரிசையாக நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் சிவக்குமார் இளையராஜாவின் தி.நகர் வீட்டிற்கு வந்துள்ளார்.
பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் இளையராஜா வீட்டிற்கு வந்துள்ளனர்.
மறைந்த பாடகியும் இளையராஜாவின் மகளுமான பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரைப்பிரபலங்கள் குவிந்து வருகின்றனர்.
மறைந்த பாடகி பவதாரிணி மிகவும் எளிமையானவர் என இயக்குநர் தனது இரங்கல் பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
புற்றுநோயால் இலங்கையில் காலமான பவதாரிணியின் உடல் இளையராஜாவின் தி.நகர் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவரது உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரத்யேக அமரர் ஊர்தி மூலம் இளையராஜா வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இளையராஜாவின் தி.நகர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள பவதாரிணியின் உடல் இன்று இரவு 10 மணிவரை அஞ்சலிக்காக அங்கு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த பவதாரிணியின் உடல் தி.நகரில் உள்ள இளையரஜாவின் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகினர், பொதுமக்கள் இளையராஜா வீட்டிற்கு வந்து கொண்டு உள்ளனர்.
இளையராஜாவின் மகள் மறைந்தது வருத்தம் அளிக்கின்றது. இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.
தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு பவதாரிணியின் உடல் கொண்டு செல்லப்படுகின்றது. விமான நிலையத்தில் இருந்து அவரது உடல் வைக்கப்பட்டுள்ள வாகனம் புறப்பட்டது.
பவதாரிணியின் உடல் தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டு வரப்படவுள்ள நிலையில் கங்கை அமரன் மகன் பிரேம்ஜி, பாரதிராஜா மகன் மனோஜ் பாரதிராஜா ஆகியோர் வந்துள்ளனர்.
மகளின் இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்ய இசைஞானி இளையராஜா தனது சொந்த ஊரான தேனிக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த பவதாரிணியின் உடலை விமான நிலைய அதிகாரிகளிடம் இருந்து பெறுவதற்காக பவதாரிணியின் சகோதரரான யுவன் சங்கர் ராஜா வந்துள்ளார்.
பவதாரிணியின் உடலுக்கு திரைபிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த இளையராஜாவின் வீட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
பவதாரிணியின் உடலை பெறுவதற்காக இயக்குநரும் பவதாரிணியின் சித்தப்பா மகன் இயக்குநர் வெங்கட் பிரபுவும் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
பவதாரிணியின் உடலை விமானநிலையத்தில் பெறுவதற்காக இசையமைப்பாளரும் பவதாரிணியின் சகோதரருமான கார்த்திக் ராஜா விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி மறைவுக்கு ” ஒலியிலே ஒளி பாய்ச்சிய தேவதையே இனி என் விழி காண் மயில் நீ” என இயக்குநர் மாரி செல்வராஜ் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மாலை 5 மணிக்கு தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீடு அமைந்துள்ள 3, முகேஷன் சாலை, கண்ணதாசன் சிலைக்கு அருகில் பவதாரிணியின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என ராஜா குடும்பத்தார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டது.
பாடகர் பவதாரிணி மறைவுக்கு ஏ ஆர். ரஹ்மான் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் . தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் “மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இந்த துனபகரமான வேளையில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோ என்று “ ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.
Vadivelu Tribute To Bavatharini : நடிகர் வடிவேலு தனியார் தொலைக்காட்சிக்கு ஃபோனில் அளித்த பேட்டியில், “தங்க மகள் பவதாரிணியின் இழப்பை அந்த குடும்பம் எப்படி தாங்கும்” என கூறி கண்ணீர் விட்டு அழுதார்
“மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்” என இளையராஜாவின் நெருங்கிய நண்பரான நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
பவதாரணியின் உடல் இன்று மாலை 6 மணிக்கு தி நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது
Background
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணிப் பாடகியுமான பவதாரிணி (Bhavatharini) நேற்று (ஜன.25) காலமானார்.
47 வயதான பவதாரணி (Bhavatharini) புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை 5.30 மணிக்கு அவர் உயிரிழந்த நிலையில், பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1976ஆம் தேதி ஜூலை 23ஆம் தேதி இசையமைப்பாளர் இளையராஜா - ஜீவா தம்பதியினருக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது வாரிசாக பிறந்த பவதாரணி, தனது ஏகாந்தமான குரலால் தன் சிறு வயது முதலே தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர்.
ரமணர் பாடல்கள் பாடி மெய்மறக்கச் செய்வது, மயில் போல பாடலுக்கு தேசிய விருது என சாதனைகளுடன் தன் இசைப் பயணத்தை சிறு வயதில் தொடங்கிய பவதாரணி, தமிழ், தெலுங்கு, இந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளார். நீண்ட காலத்திற்குப் பின்னர் இவர் சமீபமாக மூன்று படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருந்தாதாக கூறப்படுகின்றது.
இளையராஜா இசையமைத்த ராசய்யா என்ற படத்தின் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பவதாரணி, தன் சகோதரர் யுவன், தேவா, ஹாரிஸ் ஜெயராஜ் என பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார். பவதாரணி சபரிராஜ் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், சென்ற மாதம் தான் பவதாரணிக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது குறித்து கண்டறியப்பட்டதாகவும், இலங்கைக்கு சிகிச்சைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் , சிகிச்சை தொடங்கும் முன்னரே அவர் உயிரிழந்ததாகவும் பவதாரணியின் உறவினரும் நடிகையுமான கருணா விலாசினி தெரிவித்துள்ளார்.
இவரது இசையில் இலக்கணம், அமிர்தம், இந்தி திரைப்படமான பிர் மிலேங்கே உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பவதாரணியின் இழப்பால் வாடும் இளையராஜாவின் குடும்பத்தினருக்கு திரையுலகினர் தொடர்ந்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -