நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துவருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில் பீஸ்ட் படத்தின் 100ஆவது நாள் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து புகைப்படம் ஒன்றை நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, நெல்சன் உள்ளிட்ட பலர் இடம்பெற்றிருந்தனர். விஜய்யின் ஸ்டைலிஷ் லுக்கை கண்ட அவரது ரசிகர்கள் புகைப்படத்தை கொண்டாடிவருகின்றனர்.
அதனை அடுத்து, இப்படத்தின் நாயகியான பூஜா, தனக்கு படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், பீஸ்ட் படத்தில் நடித்தது குறித்தும், விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
”பீஸ்ட் படத்தில் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. படப்பிடிப்பின்போது நிறைய சிரித்தோம். கண்டிப்பாக படம் பார்க்கும் உங்களுக்கும் நல்ல அனுபவம் இருக்கும். இந்த படம் முழுக்க முழுக்க இயக்குனர் நெல்சன் ஸ்டலிலும், விஜய் சாரின் ஸ்டைலிலும் உருவாகி இருக்கின்றது. அதனால், முழு எண்டர்டெயின்மெண்ட் உறுதி. செட்டை தாண்டியும் படத்தில் நடித்த அனைவரும் ஒரு குடும்பமாய் உணர்கிறோம். படப்பிடிப்பு நடந்தபோது சுற்றுலாவுக்கு சென்று வந்தது போலவே உணர்கிறேன். இன்று பீஸ்ட் படப்பிடிப்பில் எனக்கு கடைசி நாள். என்னுடைய பாகங்களை நடித்து முடித்திருக்கிறேன். விரைவில் திரையரங்குகளில் சந்திக்கின்றோம்.” என பூஜா பேசி இருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்