✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Watch Video : காமெடி என்ற பெயரில் ட்ராக் மாறுகிறதா குக்கு வித் கோமாளி 5? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Advertisement
லாவண்யா யுவராஜ் Updated at: 15 Jul 2024 03:19 PM (IST)

Watch Video: குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் காமெடி என்ற பெயரில் கோமாளிகள் செய்யும் அட்ராசிட்டி பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது என நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.

குக்கு வித் கோமாளி 5

NEXT PREV










சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது அதே அளவுக்கு ரியாலிட்டி ஷோக்களையும் ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள். அதிலும் ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு அமோக வரவேற்பு உள்ளது.  அந்த லிஸ்டில் கடந்த நான்கு சீசன்களாக மக்களின் ஆதரவை பெற்றது தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி. தற்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

 

 


 

குக்கு வித் கோமாளி சீசன் 5 துவங்கியதில் இருந்தே ஏராளமான சிக்கல்கள், குழப்பங்களுடன் தான் துவங்கியது. தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நடுவர், கோமாளிகள் வரை அனைத்திலும் ஏகப்பட்ட மாற்றங்கள். குக்கு வித் கோமாளி என்ற கான்செப்ட் துவங்கிய நாள் முதல் நான்கு சீசன் வரை இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கலக்கி வந்த வெங்கடேஷ் பட் - தாமு கூட்டணி உடைந்தது. வெங்கடேஷ் பட் பதிலாக மிகவும் பிரபலமான சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்துள்ளார். கடந்த நான்கு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த முறை பல புதிய கான்செப்ட்களை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

 

இந்நிலையில் நம்பர் ஒன் ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சியாக இருந்து வரும் 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி மீது அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள். குக்குகளை சமைக்க விடாமல் செய்வதும், இடைஞ்சல் கொடுப்பதும் தான் கோமாளிகள் வேலை. ஆனால் அதே சமயத்தில்  குக்குகளையும், கோமாளிகளையும் கலாய்ப்பதும் நடைபெறும். ஆனால் இந்த 5வது சீசனை பொறுத்தவரையில் கலாய்ப்பது என்பது வரைமுறையை தாண்டி ஆபாசமாக பேசும் அளவுக்கு உருமாறி இருப்பது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. 

 



 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக இருந்து வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் தேவையில்லாத கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்துவது, கெட்டவார்த்தைகளை சொல்வது போல ஆரம்பித்து அதை வேறு ஒரு வார்த்தையும் கனெக்ட் செய்து பேசுவது, இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளை பயன்படுத்துவது இப்படி நாளுக்கு நாள் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி ட்ராக் மாறி செல்வதாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். 

 

இந்த வாரம் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் சில வீடியோ கிளிப்பிங்களை பகிர்ந்து அது குறித்து கமெண்ட் மூலம் வறுத்தெடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள். கொஞ்சம் கொஞ்சமாக அபிமானத்தை இழந்து வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

 

அதே வேலையில் சன் டிவியில் வெங்கடேஷ் பட் 'டாப் குக்கு டூப் குக்கு' என்ற பெயரில் சமையல் கலந்த காமெடி நிகழ்ச்சியை செஃப் வெங்கடேஷ் பட் தான் தொகுத்து வழங்கி வருகிறார். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் அதே கான்செப்ட் தான் என்றாலும் சன் டிவியில் சமையல் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.     

 










Published at: 15 Jul 2024 03:19 PM (IST)
Tags: Sun TV Vijay TV Venkatesh Bhat Cooku with Comali 5 top cooku doop cooku
  • முகப்பு
  • பொழுதுபோக்கு
  • Watch Video : காமெடி என்ற பெயரில் ட்ராக் மாறுகிறதா குக்கு வித் கோமாளி 5? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.