வெற்றி மாறன் தயாரித்து மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்து திரையரங்கில் வெளியான ‘பேட் கேர்ள்’ படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த படம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
தனது கிராஸ் ரூட் கம்பெனி மூலம் இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தனர். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் இயக்கியிருந்தார். இப்படத்தின் கதையின் நாயகியாக அஞ்சலி சிவராமன் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் டிஜே அருணாச்சலம், சரண்யா ரவிச்சந்திரன், சாந்தி பிரியா, ஹிருது ஹருண் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
இந்த பேட் கேர்ள் படம் நவம்பர் 4ம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. ட்ரெய்லர் வெளியானபோது பெரும் சர்ச்சைகளை இப்படம் கிளப்பியது. சென்சார் சென்றபோது காட்சிகளில் நீக்கம், மாற்றம் என பல சோதனைகளை சந்தித்தது. எனினும் பல மாற்றங்களுடன் வெளியான இப்படத்துடன் இனிமேல் படத்தயாரிப்பில் ஈடுபட மாட்டேன் என வெற்றிமாறன் தெரிவித்தது திரையுலகில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது.
இன்றைய தலைமுறையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் எண்ணங்கள், வாழ்க்கை முறை, சுதந்திர உணர்வு ஆகியவற்றை மையப்படுத்தி இப்படத்தின் கதையானது அமைக்கப்படிருந்தது. இப்படியான நிலையில் ஓடிடியில் வெளியான பிறகு இப்படம் பெற்றுள்ள விமர்சனங்கள் விவாத பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.