தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், ஒரு காலத்தில் பஸ் கண்டெக்டராக பணியாற்றியவர். நடிப்பின் மீது இவருக்கு ஆர்வம் இருந்தும் அதற்கான முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இருந்தது. பெங்களூரில் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்த, இவருக்கு சினிமா தொடர்பான படிப்பு குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில், இவர் சென்னை வந்து படிக்க காரணமாக இருந்தவர் ரஜினிகாந்தின் காதலி தான் என்பதையும், ரஜினியின் அந்த காவிய காதல் கதையையும் கூறி உள்ளார் நடிகர் தேவன்.
ரஜினிகாந்தின் காதலி செய்த உதவி:
ரஜினிகாந்த் படிப்புக்கு பணம் இல்லாத பொது அவரின் நண்பர் ராஜ் பகதூர் தான் உதவினார் என்பது பலருக்கு தெரியும். ஆனால் ரஜினிகாந்துக்கு முதலில் உதவ முன் வந்தவர் அவரின் காதலி நிர்மலா தானாம்.

ரஜினிகாந்த் நிர்மலா என்கிற பெண்ணை பேருந்தில் நடத்துனராக இருக்கும் போதே விரும்பி உள்ளார். அந்த பெண்ணுக்கும் ரஜினிகாந்ந் மீது கொள்ளை காதல். ஒருமுறை ரஜினிகாந்த் தன்னுடைய நாடகத்தை பார்க்க நிர்மலாவை அழைத்து சென்ற போது, ரஜினிகாந்தின் நடிப்பு மற்றும் ஸ்டைலை பார்த்து பாராட்டிய நிர்மலா, நீங்கள் திரைப்படத்துறையில் நுழைந்தால் உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என ஊக்கப்படுத்தி உள்ளார். ஏதேனும் ஒரு வகையில் ரஜினிகாந்துக்கு உதவ நினைத்த நிர்மலா அடையார் பிலிம் இன்ஸ்டியூட்டில் ரஜினிகாந்த் சினிமா குறித்து படிக்க விண்ணப்பித்துள்ளார்.
ரஜினிகாந்த் படிக்க நிர்மலா செய்த உதவி
அதன் பிறகு அடையார் இன்ஸ்டியூட்டில் இருந்து, நடிப்பு பயிற்சி எடுக்க வருமாறு ரஜினிகாந்தின், பெங்களூர் அட்ரஸுக்கு போஸ்டர் ஒன்று வர, இதை கொண்டு போய் தன்னுடைய காதலியிடம் காட்டி இருக்கிறார். ரஜினிகாந்த் அதை விண்ணப்பித்தது நான் தான் என கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். வாய்ப்பு கிடைத்தது ரஜினிக்கு மகிழ்ச்சி என்றாலும், சென்னை சென்று படிக்கும் அளவுக்கு தன்னிடம் வசதி இல்லை என ரஜினிகாந்த் கூறியுள்ளார். நிர்மலா தான் சேர்த்து வைத்த மொத்த பணத்தையும் கொடுத்து அவரை சென்னைக்கு படிக்க அனுப்பினார்.
உறுதுணையாக இருந்த ராஜ்பகதூர்
நிர்மலாவை போலவே, ரஜினிகாந்த் வளர்ச்சியில் மிகவும் மகிழ்ச்சி அடைந்த ராஜ் பகதூரும் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை அடமானம் வைத்து, அதில் கிடைத்த பணத்தை ரஜினிக்கு கொடுத்து உதவினார். அது மட்டும் இன்றி, அவர் மாத மாதம் தனக்கு வரும் சம்பள பணத்தின் பாதியை ரஜினிக்கு அனுப்பி படிக்க வைத்தார்.
ரஜினிக்கு காத்திருந்த அதிர்ச்சி:
ஒரு முறை சென்னையில் இருந்து நிர்மலாவை பார்க்க பெங்களூர் வந்த ரஜினிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நிர்மலாவின் குடும்பமே அந்த ஊரில் இருந்து காலி செய்துவிட்டு எங்கோ சென்று விட்டதாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் பல இடங்களில் அவரை தேடி அலைந்தபோதும் நிர்மலாவை பார்க்க முடியாமல் போனது. இதனால் ஒரு கட்டத்தில் மனதளவில் சோர்ந்து இருந்த ரஜினிகாந்த், பின்னரே நிர்மலாவின் ஆசைக்காக... தன்னுடைய நண்பர்காகவும் நடிப்பில் சாதிக்க வேண்டும் என வைராக்கியத்தோடு சினிமாவில் சாதித்தார் என பாட்ஷா பட வில்லன், நடிகர் தேவன் தெரிவித்துள்ளார்.