Baakiyalakshmi Promo: பாக்கியலட்சுமி சீரியலில் வரும் ஈஸ்வரி கதாபாத்திரம், ஒரு தாய் அல்லது மாமியார் எப்படி இருக்கக் கூடாது என்பதை உணர்த்துகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்:

”பாத்தாலே அடிக்கனும்னு தோனுதுடா” என்ற வசனத்தை இணையவாசிகள் பெரும்பாலானோர் நிச்சயம் கேள்விபட்டு இருப்பீர்கள். அதற்கான ஒரு ஆகச்சிறந்த உதாரணம் தான், பாக்கியலட்சுமி சீரியலில் வரும் ஈஸ்வரி கதாபாத்திரம். கடந்த சில வாரங்களாக, இந்த கதாபாத்திரத்தின் செயல்கள், ரசிகர்களை மிகவும் சோதிக்கிறது. சீரியலில் வரும் மருமகள் பாக்கியலட்சுமியை காட்டிலும், அந்த சீரியலை பார்க்கும் ரசிகர்களுக்கு அதிக ரத்த கொதிப்பு ஏற்படுகிறது. அந்த அளவிற்கு எரிச்சலூட்டும் விதமாக அந்த மாமியார் கதாபாத்திரம் கொண்டு செல்லப்படுகிறது. 

ரோல் மாடல் ”பாக்கியலட்சுமி”

தோளுக்கு மேல் வளர்ந்த மூன்று பிள்ளைகள் இருக்கும் நேரத்தில், மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு முன்னாள் காதலியை கோபி திருமணம் செய்துகொள்வார். அதற்காக சோர்ந்துவிடாமல், தனது கடுமையான முயற்சி மற்றும் உழைப்பால் ஓட்டல் உரிமையாளராக பாக்கிய முன்னேறிக்காட்டுவார். இதனிடையே, பொறாமையால் முன்னாள் மனைவியின் ஓட்டல் உணவிலேயே, கோபி விஷம் கலப்பது போன்ற சம்பவங்களும் அரங்கேறும். இதுபோன்ற துரோகங்கள் அனைத்தையும் கடந்து வெற்றி பெற்றதாக பாக்கியா கதாபாத்திரம், பெண் சமூகதிற்கான முன்னுதாரணமாக காட்சிப்படுத்தப்படுகிறது.

”தப்பான அம்மா”

இதனிடையே, தனது அப்பா இறந்தபோது கூட அவரை இழிவுபடுத்தும் விதமாக கோபி பேசுவார். அதனால் ஆத்திரமடையும் தாய் ஈஸ்வரி, கோபி எனது மகனே கிடையாது. பாக்கியா தான் எனக்கு எல்லாமே என விழிகள் பிதுங்க பேசுவார். ஆனால், காலப்போக்கில் என்ன நடந்தாலும் கோபி என்னுடைய ஒரே மகன் அல்லவா என தாய்புராணம் பேசுவார். ஓட்டலில் வாடிக்கையாளர்கள் உண்ணும் உணவில் விஷம் கலந்தாலும், என மகன் தெரியாமல் செய்துவிட்டான் என ஆதரவாக நிற்பார். இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதால், பாக்கியாவை மீண்டும் தனது மகனுடன் சேர்ந்து வாழும்படி வலியுறுத்துவார். விஷம் வைத்து பலரின் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் மகனை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தால், அதுவும் தவறு என பாக்கியாவிடம் சண்டைக்கு வருவார். ஒட்டுமொத்தத்தில் தனது மகன் என்ன செய்தாலும் அது தவறு இல்லை என்ற ஒரு முட்டாள்தனமான கதாபாத்திரம் தான் இந்த ஈஸ்வரி. 

தாயுள்ளம் அப்படி தான் இருக்கும் என சிலர் பேசலாம். ஆனால், எந்த தாயும் இப்படி ஒரு குருட்டுத்தனமான பாசத்தை வழங்கமாட்டார். அதுவும் கடந்த காலங்களில் கோபி செய்த செயல்களை பார்த்தால் தெரியும். அந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமா? என்ரு. உண்மையில், ஒரு தாய் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான உதாரணம் தான் ஈஸ்வரி. இப்படி ஒரு தாய் இருந்தால் நிச்சயம் அவரது மகனின் எதிர்காலமும் கோபி கதாபாத்திரம்  போல தான் இருக்கும்.

”மோசமான மாமியார்”

ஈஸ்வரி கதாபாத்திரம் தவறான தாய் மட்டுமல்ல, மிகவும் மோசமான மாமியரும் கூட. மகன் நடுத்தெருவில் விட்டுச் சென்றபோது பக்கபலமாக இருந்த மருமகளை, மகன் மீண்டும் வந்துவிட்டான் என்பதற்காக தூக்கி எறிவது, மகனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக மட்டம் தட்டி பேசுவது என அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுகிறார். விவாகரத்தனாலும் பரவாயில்லை என, முன்னாள் மனைவியின் வீட்டிலேயே கூச்சமின்றி தனது மகனை அவரது மனைவியுடன் தங்கவைக்கிறார். சீரியல் என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே ஈஸ்வரி கதாபாத்திரம் அந்த வீட்டில் இன்றளவும் உள்ளது. நிஜவாழ்வில் இப்படி ஒரு கதாபாத்திரம் இருந்தால், என்றோ பொட்டி படுக்கையுடன் வெளியே தள்ளப்பட்டு இருப்பார் என்பதே நிதர்சனமான உண்மை. ஒரு கட்டாயம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் இவரே சாட்சி.

வெரி ராங் ஈஸ்வரி..!

நல்லது கெட்டதை எடுத்துச் சொல்வதற்கு வீட்டில் பெரியவர்கள் இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், தான் சொல்கிறேன் என்பதால் அதற்கு அனைவருமே சரி மட்டுமே சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறது ஈஸ்வரி கதாபாத்திரம். குடும்ப கவுரவம் என்ற பெயரில் கல்லூரியில் படிக்கும் பேத்திக்கு திருமணம் செய்து வைக்க முயல்கிறார். தடுக்க நினைக்கும் மருமகளிடம், உன்னுடைய விருப்பத்தை யாரும் கேட்கவில்லை என வசனம் பேசுகிறார். அதாவது  3 குழந்தைகளுடன் தனது மனைவியை விட்டுச் சென்ற மகன் கோபியை, அதே பாக்கியாவின் வீட்டிலேயே தங்க வைப்பார். விவாகரத்து ஆன பிறகும் மகன் கோபியின் பேச்சுக்கு, மருமகள் கட்டுபட வேண்டும் என கட்டளையிடுவார். சொந்த மகளின் திருமண விவகாரத்தில் பேச தாய்க்கு உரிமையில்லை என்பார். பேத்திக்கு திருமணத்தில் விருப்பம் உண்டா? இல்லையா? என்பது எல்லாம் முக்கியமில்லை. தான் முடுவெடுத்தால் போதுமேன இஷ்டமேனிக்கு பேசிக்கொண்டு இருப்பார்.

ரசிகர்களை எரிச்சலடைய செய்யும் ஈஸ்வரி:

தனது ஒவ்வொரு நடவடிக்கையாலும் பாக்கியாவை காயப்படுத்த வேண்டும் என்பதே ஈஸ்வரி கதாபாத்திரத்தின் வடிவமைப்பு. ஆனால், அதையும் தாண்டி சீரியல் பார்க்கும் பொதுமக்களுக்கும் அந்த கதாபாத்திரம் எரிச்சலூட்டுகிறது. உதாரணமாக, பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு மேலே வழங்கப்பட்டுள்ளது. அதனை பார்த்துவிட்டு வாருங்கள். இப்போது நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கே புரியும். இந்த வாரம் மட்டுமல்ல, கடந்த சில மாதங்களாகவே இப்படி தான் தொடர்கிறது.

விஜய் டிவி - போதும்டா சாமி..!

பாக்கியலட்சுமி சீரியல் ஒரு காலத்தில் டிஆர்பி-யில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. நகைச்சுவையாகவும் , எதார்த்தமாகவும் இருந்தது தான் அதற்கு காரணம். ஆனால், தற்போது அந்த சீரியல் மிகவும் க்ரிஞ்ச் ஆகவும், மிகவும் விஷமத்தனமாகவும் நகர்ந்து வருகிறது. ஆர்வமுடன் பார்க்கும் ரசிகர்களுக்கும், மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. உண்மையில் சொல்லப்போனால் இந்த சீரியலை, பாக்கியாவின் வெற்றியுடன் என்றோ முடித்து இருக்கலாம். ஆனால், பெயர் பிரபலமாகிவிட்டது, நிலையான பார்வையாளர்களை கொண்டிருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, தவறான முன்னுதாரணங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகி கடுப்பேற்றி வருகிறது.