அயலான் படத்தைத் தொடர்ந்து  நடிகர் சூர்யாவை வைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டிருப்பதாக இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்


அயலான்


இன்று நேற்று நாளை படத்தைத் இயக்கிய ரவிக்குமார் தனது இரண்டாவது படமாக அயலான் படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் , ரகுல் ப்ரீத், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏலொயன் ஃபேண்டஸி படமாக உருவாகி இருக்கும் அயலான் படம் வருகின்ற ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இந்நிலையில் அயலான் படத்தின் ட்ரெய்கர் நேற்று ஜனவரி 5 ஆம் தேதி வெளியானது.


அடுத்தடுத்த சைன்ஸ் ஃபிக்‌ஷன் 


ஹாலிவுட்டில் அனிமேஷ் படங்களுக்கு டிம் பர்டன், சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களுக்கு  ஸ்டான்லி குப்ரிக், ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க், போர் பற்றிய படங்களுக்கு ரிட்லி ஸ்காட் போன்ற இயக்குநர் இருக்கிறார்கள். ஆனால் தமிழில் இப்படி ஒரு குறிப்பிட்ட ஜானர் திரைப்படங்களை எடுப்பவர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். இப்படியான சூழலில் தனது முதல் இரண்டு படத்தையும் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களாக ரவிக்குமார் இயக்கியுள்ளார். இயல்பாகவே இந்த மாதிரியான கதைகளை தேர்வு செய்யும் ஆர்வம் கொண்டவராக ரவிக்குமார் இருக்கிறார். இப்படியான நிலையில் தனது அடுத்தப் படமும் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக இருக்கும் என்று ரவிக்குமார் தெரிவித்துள்ளது ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.


சூர்யாவுடன் இணையும் ரவிக்குமார்






சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ரவிக்குமார் நடிகர் சூர்யாவிடம் தான் ஒரு சைன்ஸ் ஃபிக்‌ஷன் கதையை சொல்லியிருப்பதாகவும் சூர்யாவுக்கு இந்த கதை பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சூர்யா தற்போது நடித்து வரும் படங்களில் வேலைகள் முடிந்தப் பின் இந்தப் படத்தின் வேலைகள் தொடங்கும் என்று ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் இரும்புக்கை மாயாவி படத்தில் சூர்யா நடிக்க இருக்கும் நிலையில் இன்னொரு சைன்ஸ் ஃபிக்‌ஷன் படம் சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.


சூர்யா நடித்து வரும் படங்கள்


தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். பாபி தியோல் , திஷா பதானி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடிக்க தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.  இதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கும் புறநானூறு , வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் உள்ளிட்டப் படங்களில் நடிக்க இருக்கிறார்.