பாயும் புலி படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய பைக்குடன் சூபபர்ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனம்.


ஏ.வி. எம் அருங்காட்சியகம்


தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கிய அங்கமாக இருந்து வரும் ஏ.வி.எம் ஸ்டூடியோ பண்பாட்டு அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வைத்தது . இதன்  தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக  உலக நாயகன் கமலஹாசன்,வைரமுத்து, நடிகர் சிவக்குமார் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய திரைப் பிரபலங்கள் மற்றும்  ஏ.வி.எம் குடும்பத்தின் உறுப்பினர்களும்  கலந்துகொண்டார்கள்.


பழமையான பொருட்கள்


இந்த அருங்காட்சியகத்தில் எம்.ஜி.ஆர்  திரைப்படங்களில் அணிந்த ஆடைகள், நடிகர் கமலஹாசன் அணிந்த ஆடைகள் முதலிய பொருட்கள்  பராமரிக்கப் பட்டுள்ளன. மேலும் பல்வேறு படங்களில் படத்தொகுப்பு ஒளிப்பதிவுகளுக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு தொழில்நுட்பக் கருவிகள்,கலைப்பொருட்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.


இது மட்டுமில்லாமல் தமிழ் திரைப்படங்களில் வெவ்வேறு  நடிகர்களால் பயன்படுத்தப்பட்ட 40 கார்கள், 20 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை நீங்கே பார்க்கலாம். ஏ.வி.எம் ஸ்டுடியோவை நிறுவிய ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் சிலையும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது. 


பாயும் புலி படத்தில் ஓட்டிய பைக்






மேலும் ரஜினிகாந்த் 1983 ஆம் ஆண்ட் வெளியான பாயும்புலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் திரைப்படத்தில் அவர் ஓட்டிய சுஸுகி ஆர்.வி.90 ரக இருசக்கர வாகணம்  மற்றும் சிவாஜி திரைப்படத்தில் ரஜினியின் உருவத்தில் பயன்படுத்தியிருந்த சிலையும் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிரமித்துப் போனார். தற்போது ரஜினிகாந்த் பாயும்புலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் திரைப்படத்தில் அவர் ஓட்டிய சுஸுகி ஆர்.வி.90 ரக இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது ஏ.வி.எம் நிறுவனம். இந்த புகைப்படத்தில் உள்ள பைக்கை ரஜினிகாந்த் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டியிருந்தார். 


வேட்டையன்


லைகா ப்ரோடக்‌ஷ்ன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் வேட்டையன். ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார். அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர், ரானா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திருநெவேலி, தூத்துகுடி , சென்னை , பாண்டிச்சேரி , மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தொடர்ந்து தற்போது ஆந்திரா கடப்பாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.