சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் முதல் சிங்கிள் எப்போது வெளியாகும் என்ற தகவலை வரும் புதன்கிழமை யுவன் அறிவிப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் மாநாடு. அரசியல் கதைக்களத்தில் சிம்பு இறங்கியுள்ள இந்த திரைப்படம் அவரது ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாநாடு படத்தின் இசையமைப்பாளர் யுவன் அண்மையில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் 'மாநாடு படத்தின் சிங்கள் விரைவில் வெளிவரவுள்ளது' என்று கூறி தனது ரசிகர்களையும் சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 






இந்நிலையில் இதுகுறித்து கூடுதல் தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் 'மாநாடு படத்தின் ஆடியோ உரிமத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் யு1 ரெகார்டஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறினார். மேலும் இந்த படத்தின் முதல் சிங்கள் எப்போது வெளியாகும் என்ற தகவலை வரும் புதன்கிழமை யுவன் சங்கர் ராஜ வெளியிடுவார்' என்றும் கூறியுள்ளார். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் மாநாடு திரைப்படம் உள்ளது குறிப்பிடத்தக்கது.  




இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள படம் தான் "மாநாடு". படத்திற்கான எதிர்பார்ப்பு சிம்புவின் ரகிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. சிம்புவின் நடிப்பில் இறுதியாக வெளியான படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கும் மாநாடு படம் நிச்சயம் சிம்புவிற்கு கைகொடுக்கும் என நம்பப்படுகிறது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.


மேலும் எஸ்.ஜே.சூர்யா, வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்துள்ளனர். படத்திற்கான ஒளிப்பதிவு பணியை ரிச்சர்ட் எம் நாதன் கவனிக்க, சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரிக்கிறார். படத்தில் "அப்துல் மாலிக்" என்ற கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் முழுக்க முழுக்க அரசியல் களம் கொண்டு பயணிக்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.


‛நான் அப்பா ஆகிட்டேன்...’ மகன் போட்டோவை போட்ட பிக்பாஸ் நடிகர்!


படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. "மாநாடு" படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், படத்தின் முழு பணிகளும் விரைவில் முடிவடையும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் மாநாடு படம் வெளியாகும் முன்பே தனது அடுத்த பட அறிவிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு. பிரபல தயாரிப்பாளர் டி.முருகானந்தனின் ராக்போர்ட் என்டர்டையின்மன்ட் நிறுவனத்துடன் புதிய படத்தில் இணைகிறார். இது அவர் இயக்கும் 10வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.