ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் தற்போது மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. 


குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன் காம்ப்ளக்ஸில் இந்த நிகழ்வானது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்திய அளவிலான பிரபலங்கள், வி.ஐ.பிக்கள், வி.வி.ஐ.பிக்கள் மட்டுமின்றி உலகளவில் உள்ள ஏராளமான பிரபலங்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதில் பலரும் கலந்து கொண்டுள்ளனர். 



அட்லீயின் பாலிவுட் என்ட்ரி : 


அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்து ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் நடித்திருந்த 'ஜவான்' திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவில் இயக்குநராக என்ட்ரி கொடுத்து முதல் படத்திலேயே 1100 கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து பாலிவுட் சினிமாவை கவர்ந்தவர் இயக்குநர் அட்லீ.


மகனை காட்டிய அட்லீ :  


முகேஷ் அம்பானி வீட்டு திருமண கொண்டாட்ட விழாவில் இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் கலந்து கொண்டார். முதல் முறையாக அவர்களின் மகன் முகத்தை இந்த விழாவில் தான் ரிவீல் செய்துள்ளார் இயக்குநர் அட்லீ. அவர்கள் இருவரும் அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 







அடுத்தது ஹாலிவுட் :


இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அட்லீ, ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தன்னுடைய ஐந்தாவது படத்திலேயே பாலிவுட்டில் நுழைந்துவிட்டார். இது குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பேசுகையில் "பாலிவுட்டை அடைய எனக்கு 8 வருடங்கள் தேவைப்பட்டது. ஆனால் அடுத்த 3 ஆண்டுகளில் என்னுடைய ஹாலிவுட் அறிவிப்பு குறித்து நீங்கள் எதிர்பார்க்கலாம்" என தெரிவித்து இருந்தார்.