அதர்வா நடித்துள்ள DNA

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா , நிமிஷா சஜயன் , ரமேஷ் திலக் நடித்துள்ள டிஎன்ஏ திரைப்படம் நாளை ஜூன் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா கேபி, சுப்ரமணியன் சிவா, கருணாகரன், பசங்க சிவகுமார் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ள நிலையில்ஸ்ரீகாந்த் ஹரிஹரன் , சத்ய பிரகாஷ் , அனல் ஆகாஷ் , பிரவீன் சைவி , சாஹி சிவா பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்கள். DNA படத்திற்கு விமர்சகர்கள் சமூக வலைதளத்தில் என்ன விமர்சனம் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம் 

DNA பட விமர்சனம் 

"அதர்வா நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது டி.என்.ஏ திரைப்படம். முதல் முப்பது நிமிடங்கள் படம் எமோஷன்லான டிராமாக தொடர்ந்து பின் விறுவிறுப்பான த்ரில்லராக வேகமெடுக்கிறது. இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் கதாபாத்திரங்களை மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார். படத்தில் அனைத்து அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக அதர்வா மற்றும் நிமிஷா சஜயனின் நடிப்பு கதையை வேறு ஒரு தளத்திற்கு உயர்த்துகிறது. பல சுமாரான படங்களுக்குப் பின் தேவையான ஒரு படமாக அதர்வாவுக்கு இந்த படம் அமைந்துள்ளது" என விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்