இது யாருக்கு சோதனை காலம் என தெரியவில்லை.... உண்மையில் இது அஜித்திற்கு சோதனை காலமா... அல்லது நமக்கு சோதனை காலமா... இல்லை... ‛40 கதை’ அஷ்வினுக்கு சோதனை காலமா எனத் தெரியவில்லை. சரி முதலில் அஜித்தில் இருந்து ஆரம்பிப்போம்... அல்டிமேட் ஸ்டார் என கொண்டாடப்பட்ட அஜித்குமார், தனது பெயருக்கு முன்னாள் இருந்த பட்டங்கள் வேணாம்... அஜித்குமார் என்று அழைத்தால் போதும் என்றார். அதன் பின் அவரை ‛தல’ என்று அன்போடு அவரது ரசிகர்கள் அழைத்து வந்தனர்.
திடீரென தனது படத்துடன் ஜெயலலிதா பிரச்சாரத்தில் சிலர் நிற்க, மறுநாளே தனது ரசிகர் மன்றத்தை கலைத்து அறிவித்தார் அஜித். பட்டம் வேண்டாம், மன்றம் வேண்டாம், ரசிகர்கள் அன்போடு அழைக்கும் தல போதும் என கடத்தி வந்த அவரது நாட்களை, தோனி ரசிகர்களும், சிம்பு ரசிகர்களும், ஏன்... வருவோர், போவோம் எல்லாம் ‛தல’ என்கிற வார்த்தையை பயன்படுத்த தொடங்கியதும், அந்த வார்த்தை தனக்கானது இல்லை என முடிவு செய்த அஜித், சமீபத்தில் ‛தல’ என்கிற பட்டத்தை பயன்படுத்தி தன்னை அழைக்க வேண்டாம்... அஜித் அல்லது ‛ஏகே’ என்று அழையுங்கள் என்று அறிக்கைவிட்டார்.
சரி... அத்தோடு பிரச்சனை முடிந்துவிட்டதா... என்றால், இப்போது ‛ஏகே’ என்கிற பெயருக்கும் பிரச்சனை வந்துவிட்டது. சரி... இப்போது இரண்டாவது நபரான அஸ்வினுக்கு வருவோம்.... இதற்கும் அஸ்வினுக்கும் என்ன சம்பந்தம்? அது தான் சம்மந்தமே! ‛40 கதை கேட்டு தூங்கிட்டேன்... 41வது கதையான ‛என்ன சொல்லப் போகிறாய்...’ கதை தான், தனக்கு பிடித்ததாகவும் கூறி, முதல் படம் வெளியாகும் முன்பே, ‛40 கதை’ என்கிற பட்டத்தை பெற்ற அஷ்வின்குமார் படம் பொங்கலுக்கு வெளியாகி, கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இது ஒருபுறமிருக்க, மற்றொரு சர்ச்சையை தன்வசமாக்கியிருக்கிறார் அஸ்வின் குமார், இது அஜித்திற்கு வந்த சோதனை.
அஷ்வின் குமார் என்பதை, ஏகே என அவரது ரசிகர்கள் அழைக்கின்றனர். போச்சுடா... இது ஒன்னு தான் அஜித் வைத்திருந்தார். அறிக்கை கொடுத்து முழுசா ஒரு மாசம் ஆகல... அதுக்குள்ள அந்த ஏகேவும் போச்சா... ஒரு மனுசனுக்கு எவ்வளவு இடையூறு கொடுப்பீங்க என நொந்து கொள்கிறது மாஜி தலப்படை. என்ன சொல்லப் போகிறாய் படம் பார்த்து வந்த அவரது ரசிகர் படை, பேச்சுக்கு பேச்சு... ‛ஏகே’ படம் என்று தான் குறிப்பிட்டனர். ஆக... அஜித் குமாரின் ஏகே.... அஷ்வின் குமாருக்கு போய்விட்டது. இனி ஏகே என்பதையும் அவர் மாற்ற வேண்டி வரலாம். ‛டேய்.... நாங்க ஏங்க ஏற்கனவே வலிமை வரலைன்னு சோகத்துல இருக்கோம்... நீங்க வேற ஏண்டா இப்படி பண்றீங்க...’ என நொந்து கடக்கிறார்கள் அஜித் பேன்ஸ்.
கடைசியில் நமக்கான சோதனைக்கு வருவோம். 40 கதைகளை கேட்டு வெறுத்துப் போன ஒரு அறிமுக நடிகரையும் நாம் தான் பார்க்கிறோம்.... அவர் ‛ஏகே’வாக மாறியதையும் நாம் தான் பார்க்கிறோம். இன்னும் என்னவெல்லாம் பார்க்கப் போகிறோமோ... அஜித் போலவே குழம்பி நிற்க வேண்டியது தான்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்