நடிகர் மற்றும் இயக்குநரான அஸ்வத் மரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருந்த நிலையில், படப்பிடிப்பு தேதிகள் ஒத்துவராததால் அந்த வாய்ப்பை தவறவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அஸ்வத் மரிமுத்து, ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தை இயக்கி வருவதால், இரு படங்களின் படப்பிடிப்பு தேதிகளும் ஒரே நேரத்தில் அமைந்துள்ளதால் அஸ்வத் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

Continues below advertisement

லவ் டுடே , டிராகன் , டியூட் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதன் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். பி.ஆர் ஷோ என்கிற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மமிதா பைஜு கதையின் மையக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர்கள் இணைந்து இயக்குகின்றனர். முழுக்க முழுக்க மமிதா பைஜுவை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் கதை தொடக்கம் முதல் இறுதி வரை அவரது கதாபாத்திரத்தைச் சுற்றியே நகரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் இருந்து விலகிய அஸ்வத் மாரிமுத்து 

இந்த படத்தில் இயக்குநரும் பிரதீப் ரங்கநாதனின் நண்பருமான  அஸ்வத் மரிமுத்து சிறப்பு தோற்றத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் அஸ்வத் மாரிமுத்து ரஜினியின் தர்மன் படத்தை இயக்கி வருவதால் அவரால் இப்படத்திற்கு நேரம் ஒதுக்கமுடியவில்லை. அஸ்வத் மாரிமுத்து வருவது வரை படக்குழு காத்திருக்க தயாராக இருந்ந்தாலும்  மமிதா பைஜுவின் படப்பிடிப்பு தேதிகள் ஏற்கனவே பல்வேறு படங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்ததால், அவரது கால்ஷீட்டை வீணாக்க விரும்பாத அஸ்வத் மரிமுத்து, படப்பிடிப்பை தனது காட்சிகளுக்காக நிறுத்தி வைக்க வேண்டாம் என படக்குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து அவரது கதாபாத்திரம் இல்லாமலேயே படத்தின் பணிகளைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

தர்மன்

ரஜினியின் 173 ஆவது திரைப்படமாக தர்மன் திரைப்படம் உருவாகி வருகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ச் இந்த படத்தை தயாரிக்க ராஷி கண்ணா , சிம்ரன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே இரண்ராம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அக்டோபர் மாதத்திற்குள் தர்மன் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.