தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர் அருள்நிதி. இவரது கதைத் தேர்வு காரணமாகவே இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். இவரது படங்களில் மிகப்பெரிய வெற்றிப்படம் டிமான்டி காலனி.
டிமான்டி காலனி 3:
இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்தாண்டு வெளியானது. முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியான இந்த படத்தின் 2ம் பாகம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. அஜய் ஞானமுத்து இயக்கிய இந்த படத்தை முடிக்கும்போதே 3வது பாகத்திற்கான அறிவிப்புடனே முடித்திருப்பார்.
இந்த நிலையில், டிமான்டி காலனி 3ம் பாகத்திற்கான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தின் முதல் லுக் நாளை காலை 11.11 மணிக்கு ரிலீசாகிறது. இதை படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.
ஹாரர் த்ரில்லர் படம்:
2026ம் ஆண்டு புத்தாண்டை தெரிவித்திருப்பதுடன் இந்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். 2015ம் ஆண்டு முதல் பாகம் வெளியாகிய நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த 2ம் பாகம் கடந்தாண்டு வெளியானது.
இரண்டாம் பாகத்தில் நடித்திருந்த ப்ரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன், ரமேஷ் திலக், அர்ச்சனா ஆகியோர் இந்த பாகத்திலும் இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.
படக்குழு:
டிமான்டி காலனி 3 படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். குமரேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். குருசோமசுந்தரமும் நடிக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.
டிமான்டி காலனி படத்திற்கு பிறகு இமைக்கா நொடிகள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அஜய் ஞானமுத்து கோப்ரா படத்தை இயக்கினார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாதது அஜய் ஞானமுத்துவிற்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது. இதையடுத்து, கடந்தாண்டு டிமான்டி காலனி 2 படத்தை இயக்கி கம்பேக் அளித்தார்.
டிமான்டி காலனி 3 படம் வரும் தமிழ் புத்தாண்டு அல்லது அதற்கு முன்பாக வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பேய், அமானுஷ்யங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் இந்தாண்டின் வெற்றிப்படங்களில் முக்கியமானதாக அமையும் என்று படக்குழு நம்பிக்கையுடன் உள்ளது.