எங்களின் வயது வித்தியாச காதலை கிண்டலடிக்கும் அதே நபர்கள்தான், என்னுடன் செல்ஃபி எடுக்க அலைகின்றனர் என்று நடிகர் அர்ஜூன் கபூர் கூறியுள்ளார். அர்ஜுனுக்கு வயது 36, மலைக்காவுக்கு வயது 48. 


இந்த நிலையில், நடிகர் அர்ஜுன் கபூரும், மலைக்கா அரோராவும் வயது வித்தியாசத்திற்காக ட்ரோல் செய்யப்பட்டனர். இதுகுறித்து அர்ஜூன் கபூரிடம் கேட்டதற்கு, இதுபோன்ற எதிர்மறைக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது. ஏனெனில் இது அனைத்தும் போலியானது என்று கூறினார். மேலும், மக்கள் அவர்களுடைய வேலையை கவனிக்கும் வரை மற்றவை எல்லாம் சத்தமாகதான் இருக்கும் என்று கூறினார். வயதின் அடிப்படையில் உறவை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றுவது முட்டாள்தனமான சிந்தனை செயல்முறை என்றும் அவர் கூறினார்.


மேலும் அவர் கூறுகையில், “முதலாவதாக, ஊடகங்கள்தான் மக்களின் கருத்துக்களைப் பார்க்கிறது என்று நான் நினைக்கிறேன். அதில் 90% பார்க்கவில்லை. அதனால் ட்ரோலிங்கிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க முடியாது. என்னை கிண்டலடிக்கும் அதே நபர்கள்தான், என்னைச் சந்திக்கும் போது என்னுடன் செல்ஃபி எடுக்க அலைகின்றனர். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நான் என்ன செய்வது என்பது எனது விருப்பம்.  யாருடைய வயது என்ன என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட முடியாது. எனவே நாம் வாழ வேண்டும், முன்னேற வேண்டும். வயதைப் பார்ப்பதும், உறவை சூழ்நிலைப்படுத்துவதும் ஒரு வேடிக்கையான சிந்தனை செயல்முறை என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.


அர்ஜுனும் மலைக்காவும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், கடற்கரை விடுமுறையில் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை அர்ஜூன் கபூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.  “2022 ஆம் ஆண்டு உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றும் பதிவிட்டிருந்தார்.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண