விஜய் டிவியையும், ரியாலிட்டி ஷோக்களையும் பிரிக்க முடியாது. விஜய் டிவியின் பலமே அந்த சேனலில் பணியாற்றும் காமெடியன்கள் தான். மற்ற டிவி சேனல்களுடன் ஒப்பிடுகையில் விஜய் டிவியில் வரும் காமெடியன்கள் மிகவும் திறமையானவர்களாக இருக்கின்றனர். இன்னும் சொல்ல போனால், மற்ற சேனல்களும், அவர்களை வைத்துதான் பல ஷோக்களை நடத்துகின்றனர். அதற்கேற்ற மாதிரி விஜய் டிவியும், காமெடியன்களை ஒரே நிகழ்ச்சியுடன் ஓரம் கட்டாமல், சீரியல், ரியாலிட்டி ஷோ என தாங்கள் ஒளிபரப்பும் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்களுக்கான வாய்ப்பை வழங்கி வருகிறது. அப்படி சில காமெடியன்கள் தங்கள் அதீத திறமை மூலம், வெள்ளித்திரையிலும் கால்பதித்து பிரகாசித்து வருகின்றனர். அந்தவகையில் அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து தனது நகைச்சுவை திறமை மூலம் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நிஷா பங்கேற்றார். அதன் அடுத்தக்கட்டமாக தற்போது வெள்ளித்திரையிலும் நிஷா நடித்து வருகிறார். இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தனது கணவரையும் சின்னத்திரையில் அறிமுகம் செய்தார். விஜய் டிவியின் ஃபேமஸ் சீரியல் பாரதி கண்ணம்மாவிலும் நிஷா நடிக்கிறார்.



மேலும் சூப்பர் டாடி ரியாலிட்டி ஷோவிலும் ஆங்கராக இருக்கிறார். நிஷா இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன் குடும்பத்துடன் இருக்கும் படங்கள், ஷீட்டிங்கின் போது எடுக்கப்பட்ட படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். அதுமட்டுமின்றி எல்லா சின்னத்திரை செலிபிரிட்டிகளும், யூட்யூபில் தங்களுக்கென ஒரு சேனல் வைத்து அவர்களின் சொந்த கண்டென்டுகளை போட்டு வருகின்றனர். இந்நிலையில் நிஷா தனது கருப்பு ரோஜா யூடியூப் சேனலில் பகிர்ந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. விஜய் டிவி செலிபிரிட்டிகளுடன் இணைந்து விஆர் மாலுக்கு வலிமை படம் பார்க்க சென்றபோது அங்கு நடந்த சம்பவங்களை வீடியோவாக எடுத்து, தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார் அறந்தாங்கி நிஷா.  தியேட்டருக்குள் சென்று, சீட்டில் அமர்ந்து வலிமை படம் வேற லெவல்ல இருக்கு என்று சொல்லி, காலுக்கு கீழே காட்டுகிறார் நிஷா, கீழே முழுவதும் திண்பண்டங்களாக வாங்கி வைத்திருக்கிறார்.



சரத் மனைவி கிருத்திகா, மைனா, அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா, ஆசார் எல்லாரும் ஒன்றாக சென்று வலிமை பார்த்துள்ளனர். அப்போது அர்ச்சனா, "நாங்க இங்க வந்ததுக்கு முக்கியமான காரணம் அசார் தான், கலக்க போவது யாரு ஷூட் நடக்கும்போது, அக்கா நாளைக்கு வலிமை, நாம போறோம் கா ன்னார்…" என்று கூறினார். அதற்கு அசார், "தல படத்துக்கு கூட்டிட்டு வந்துருக்கேன் நானு" என சொல்கிறார். படம் பார்த்து முடித்துவிட்டு எக்ஸ்கலேட்டரில் வரும் போதும் நிஷா வீடியோ எடுப்பதை நிறுத்தவில்லை. படம் எப்படி இருந்தது என யோகி நிஷாவிடம் கேட்க, அவர் "அல்வா மாதிரி இருந்தது. அஜித் சார் ரொம்ப அழகா இருந்தாரு. அதுவும் அந்த பைக் ரேசிங்லாம் அள்ளுச்சு போ", என சொல்கிறார். பிறகு நிஷாவுக்கு மேக்கப் கிட் வாங்கி கொடுப்பதற்காக, நிஷா, மைனா, கிருத்திகா அங்குள்ள ஒரு கடைக்குள் செல்கின்றனர். மைனா நிஷாவுக்கு மேக்கப் டெஸ்ட் செய்கிறார், யோகியும், கிருத்திகாவும் அவரை கலாய்த்து தள்ளுகின்றனர். பிறகு நிஷா அங்கு வேலை பார்க்கும் ஒருவரிடம் ஒவ்வொரு பொருளாக எடுத்து, இது என்ன இது என்ன என கேட்க, அதற்கு கிருத்திகா, மாறி மாறி கவுண்டர் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஒருவழியாக அங்கிருந்து கிளம்பி, கார் பார்க்கிங் வந்து அங்கேயும் ஒரு அலப்பறை செய்துவிட்டு அந்த கேங் கிளம்புகிறது. இந்த வீடியோ இப்போது யூடியூபில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.