Aranmanai 4 Trailer: சுந்தர் சி இயக்கத்தில் தயாராகியுள்ள 'அரண்மனை 4' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. 


அரண்மனை 4:


கோலிவுட்டில் காமெடி கதை சொல்வதில் மாஸ்டராக விளங்கும் இயக்குநர்களில் ஒருவர் சுந்தர் சி. இவரின் பிரபல திரைப்பட சீரிஸ் ‘அரண்மனை’.  2014ஆம் ஆண்டு கோலிவுட் சினிமாவில் ஹாரர் படங்கள் ட்ரெண்டில் உச்சம்பெற்ற காலக்கட்டத்தில் சுந்தர். சி-யும் இந்த ட்ரெண்டில் ஐக்கியமாக அரண்மனை 1  திரைப்படத்தினை எடுத்தார்.


ஆண்ட்ரியா, ஹன்சிகா, ராய் லக்‌ஷ்மி, வினய், சந்தானம், மனோபாலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் அந்த ஆண்டு கோலிவுட்டில் வெளியான படங்களில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ஒன்றாக இப்படம் உருவெடுத்தது.


தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க முடிவெடுத்த சுந்தர்.சி, 2016ஆம் ஆண்டு அரண்மனை 2 படத்தையும், 2023ஆம் ஆண்டு அரண்மனை 3 படத்தையும் எடுத்தார். காமெடி கலந்த பேய் பட சீரிஸான இப்படத்தின் முதல் பாகம் வரவேற்பையும்,  2,3 பாகங்கள் கலவையான விமர்சனங்களையும் பெற்றன. இந்த நிலையில், அரண்மனை 4 பாகம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.


வெளியானது ட்ரெய்லர்:


அரண்மனை நான்காம் பாகத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ்,  கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  பென்ஸ் மீடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு, ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். இந்த நிலையில்,  அரண்மனை 4 பாகத்திற்கான ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.  சுந்தர்.சி-யின் தங்கையான தமன்னாவின் மர்ம மரணம் குறித்து விசாரிக்கிறார்.


கடந்த மூன்று பாகங்களிலும் சுந்தர் சியின் உறவினர்களில் யாராவது ஒருவரின் மர்ம மரணம் குறித்தே விசாரித்து வருவார். அதுபோலவே தான் இந்த பாகத்திலும் புதுமையாக நீதி தேடும் வழக்கறிஞராக இருக்கிறார் சுந்தர் சி. மேலும், வழக்கம் போல, தமன்னா மற்றும் ராஷி கண்ணாவின் கிளாமர் பாடல் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. கடந்த பாகங்களை போன்ற இதிலும் சாமி பாடல் இடம் பெற்றிருக்கிறது.



இதில், குஷ்புவின் என்ட்ரி இருப்பதான சாயல்கள் ட்ரெய்லரில் வெளிப்படுகிறது.  இந்த படத்தின் ட்ரெய்லர்  இணையத்தில்  வைரலாகி வருகிறது.  முந்தைய பாகங்களைப் போல் இல்லாமல் இந்தப் படம் வெற்றி பெறுமா?  என எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்துள்ளனர்.




மேலும் படிக்க


Ranbir - Alia: 1 வயசிலே ரூ.250 கோடி சொத்து! பாலிவுட்டின் பணக்காரக் குழந்தையாக உருவெடுத்த ரன்பீர் - ஆலியா மகள்!


Daniel Balaji: பாலாஜி எப்படி டேனியல் பாலாஜி ஆனார் தெரியுமா? சித்திதான் காரணம்!