தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவருக்கு தற்போது 61 வயதாகிறது. தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமராவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. எம்எல்ஏவாகவும் உள்ளார். ஆனால் அவ்வபோது இவரது கருத்துகள் மற்றும் செய்கைகள் மூலம் பல விமர்சனங்களுக்கு உள்ளாவது பாலகிருஷ்ணாவின் வழக்கம். . செல்ஃபி எடுக்க வரும் ரசிகர்களை தாக்குவது, சர்ச்சையான கருத்துகளை தெரிவிப்பது பாலகிருஷ்ணாவிற்கு வழக்கமான ஒன்றுதான்.
சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குறித்து சர்சை கருத்து பேசியிருந்தார். அதாவது “ஏ.ஆர்.ரஹ்மான் யார் என்றே எனக்கு தெரியாது. வருடத்திற்கு ஒரு ஹிட் கொடுப்பாரே அவர்தானே! , ஏதோ ஆஸ்கார் விருது வாங்கியிருக்காறே, எனக்கு அதை பத்தியெல்லாம் தெரியாது. நான் பாரத ரத்னா விருதே வேண்டாம்னு சொன்னவன். அது என் கால் நகத்துக்கு சமம், என் குடும்ப கௌரவத்திற்கு முன்னால எல்லாம் காலுக்கு கீழதான்” என தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஏர்.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் கண்டன பதிவுகளை ஷேர் செய்து வருகின்றனர். தற்போது #whoisbalakrishna என்ற முன்னெடுப்பு மூலம் பாலகிருஷ்ணாவை வறுத்தெடுத்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக இது ட்விட்டரில் வைரலாக இருந்து வருகிறது. கண்டனங்களும் வலுத்து வருகிறது.
இதற்கு பதிலளிக்கும் பாலகிருஷ்ணாவின் தெலுங்கு ரசிகர்கள் “அவர் வெகுஜன மக்களுக்கு கடவுள், தங்க மனசுக்காரர், பல பேரின் வாழ்க்கையை புற்றுநோயில் இருந்து காத்தவர்” என ஒருபக்கம் புகழாரம் சூட்டி வருகின்றனர்.