சூரரைப்போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி தற்போது வினீத் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'தங்கம்'.
விளம்பரத்திற்காக சென்ற இடத்தில் நடந்த விரும்பத்தகாத சம்பவம் :
தங்கம் படத்தின் விளம்பர பணிகளுக்காக கல்லூரி நிகழ்வு ஒன்றில் படக்குழுவினருடன் கலந்து கொண்ட அபர்ணா பாலமுரளிக்கு அங்கு ஒரு நெருடலான சம்பவத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கல்லூரி மாணவர் ஒருவர் அபர்ணாவை தகாத முறையில், தோள் மீது கைவைத்து தொட முயற்சித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பலரும் தங்களின் ஆதரவை அபர்ணாவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.
மாணவரின் தகாத செயல் :
சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் அபர்ணா பலமுரளியை பூங்கொத்து கொடுத்து வரவேற்பதற்காக மேடைக்கு சென்ற சமயத்தில் அவருடன் கை குலுக்கி பூங்கொத்தை கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் அபர்ணாவை எழுந்து நிற்கச்சொல்லி அவரின் தோல் மீது கைபோட்டு போட்டோவிற்கு போஸ் கொடுக்க முயற்சித்தார். மாணவரின் இந்த செயலை விரும்பாத நடிகை விரைவாக விலகி சென்றுள்ளார். மாணவரின் இந்த அத்துமீறிய செயல் அபர்ணாவிற்கு பிடிக்கவில்லை.
வைரலாக பரவும் வீடியோ :
சோசியல் மீடியாவில் பரவிவரும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அபர்ணாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேலும் மேடையில் தகாத முறையில் செயல்பட்ட அந்த மாணவர் பின்னர் அபர்ணாவிடம் மன்னிப்பு கேட்டதாகவும் அவர் அப்படி செய்ததற்கான விளக்கத்தையும் கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது.
கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள் :
இருப்பினும் மேடையில் இருந்த கல்லூரி அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் ஏன் இந்த நடத்தையை கண்டிக்கவில்லை. இந்த செயல் செய்த மாணவருக்கும் அந்த கல்லூரி நிர்வாகத்திற்கும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள். சோசியல் மீடியாவில் கமெண்ட்கள் இவர்களின் இந்த பண்பற்ற செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் மன்னிப்பு மட்டும் கேட்பது இது போன்ற செயலுக்கு தீர்வாகாது. ஒழுக்கம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமாக கடைபிடிக்க பட வேண்டிய ஒன்று என வறுத்தெடுத்து வருகிறார்கள்.
குற்றவியல் சார்ந்த திரைக்கதை :
தங்கம் திரைப்படம் ஒரு குற்றவியல் சார்ந்த திரைக்கதையாகும். பாவனா ஸ்டுடியோவுடன் இணைந்து ஃபஹத் ஃபாசிலின் ஃபாசில் அண்ட் பிரண்ட்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்கள் டங்கள் மற்றும் 'அக்லி' பிரபலம் கிரீஷ் குல்கர்னி. சில தினங்களுக்கு முன்னர்தான் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஜனவரி 26ம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.