தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கனவு கன்னி என சொல்லும் அளவிற்கு பிஸியாகவும் , பிரபலமாகவும் இருந்து வந்தவர் நடிகை அனுஷ்கா. பாகுபலி என்னும் பிரம்மாண்ட திரைப்படத்தில் அனுஷ்காவின் கதாபாத்திரம் , உலக சினிமா ரசிகர்களையும் பிரம்மிக்க செய்தது. அந்த படத்தில் நடித்த பலரும் அடுத்தடுத்து தங்கள் கெரியரில் உச்சத்தை தொட்டு வரும் நிலையில், அனுஷ்காவிற்கோ எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. காரணம் அவர் உடல் எடைதான் என கூறப்படுகிறது. சமீபத்தின் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், இதுவரையில் எனக்கு ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என கூறி பதிவு ஒன்றை ஷேர் செய்திருந்தார். இதனால் நடிகை சினிமா துறையிலிருந்து மீண்டும் விலகுகிறாரோ என பலரும் கிசு கிசுக்க தொடங்கின. தெலுங்கு பத்திரிக்கைகளும் கூட அனுஷ்கா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆக போகிறார் அனுஷ்கா என செய்திகள் வெளியிட்டன.
முன்னதாக ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்கும் ‘சந்திரமுகி ‘ இரண்டாம் பாகத்திலும் அனுஷ்கா நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் இது குறித்து படக்குழுவினர் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை இன்னும் வெளியிடவில்லை. இருந்தாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்தான் என கோலிவுட் பக்கம் கிசு கிசுக்கப்படுகிறது.