இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த இரு நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. இரண்டாவது நாளில் அஜித் மற்றும் ஷாலினி இந்த நிகழ்விற்கு வந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். சினிமா பிரபலங்களின் நிகழ்ச்சியில் பெரும்பாலும் கலந்துகொள்ளாத அஜித் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது ரசிகர்களிடையே கவனமீர்த்துள்ளது. நிகழ்ச்சியில் இருந்து அஜித் கிளம்புகையில் அவரை அனிருத் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அனிருத் காவ்யா மாறன் திருமண கொண்டாட்டம்
அனிருத் காவ்யா மாறன் திருமணம் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதி சென்னையில் இரண்டு நாட்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முதல் நாள் வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல், திரைத்துறை, கிரிக்கெட் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், கார்த்தி, சித்தார்த், மகேஷ் பாபு, நடிகை அதிதி ராவ் ஹைதரி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் அட்லீ, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இரண்டாவது நாள் வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் கலந்துகொண்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைச் சந்தித்த அஜித் அவரைக் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷியுடன் பங்கேற்றார். நடிகர்கள் சிலம்பரசன், சிவகார்த்திகேயன், விஜய் தேவரகொண்டா, நடிகைகள் நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே, சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ, ஷங்கர், கார்த்திக் சுப்புராஜ், அஷ்வத் மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா ஆகியோரும் பங்கேற்றனர்.
கலந்துகொள்ளாதவர்கள்
இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் நேரில் வருகை தரவில்லை. இருவரும் மணமக்களுக்கு வாழ்த்து கடிதங்களை அனுப்பியிருந்தனர். மேலும், சிவகார்த்திகேயன் முதல் நாள் வரவேற்பில் பங்கேற்காதது ரசிகர்களிடையே பேசுபொருளானது. இருப்பினும், அவர் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். குறிப்பாக நடிகர் தனுஷ் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது ரசிகர்களிடையே விவாதப்பொருளாக இருந்துவருகிறது
