தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்களுள் ஒருவரான நடிகர் விஜய் தனது 48வது பிறந்தநாளை நாளை ஜூன் 22 அன்று கொண்டாடுகிறார். தமிழ்நாட்டில் நடிகர் விஜயின் பிறந்தநாள் பண்டிகையைப் போல அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. மேலும், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, மொத்த தமிழ்த் திரையுலகமே அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறுவதும், அவருக்கு அன்பைப் பகிர்வதும் வழக்கம். 


இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் நடிகர் விஜய் பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பாகவே கிஃப்ட் ஒன்றை வழங்கியிருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் இசைக் கோர்வை ஒன்றின் யூட்யூப் லிங்கைப் பகிர்ந்துள்ளார் அனிருத். இது சமீபத்தில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பிலும், இயக்குநர் நெல்சன் இயக்கத்திலும், அனிருத் பின்னணி இசையமைத்த `பீஸ்ட்’ திரைப்படத்தின் ஒரிஜினல் சௌண்ட் ட்ராக் ஆகும். `பீஸ்ட்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. 











இந்த ட்விட்டர் பதிவில், இசையமைப்பாளர் அனிருத் நடிகர் விஜயை டேக் செய்து, `அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே டியர் தளபதி விஜய் சார்.. இந்த இசை ட்ராக் அனைத்துமே எங்கள் மனதுக்கு நெருக்கமானவை.. எஞ்சாய்!’ எனப் பதிவிட்டுள்ளார். 


வெளியாகி இரண்டு நாள்களில் இந்த வீடியோவை இதுவரை சுமார் 8.67 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோ இதுவரை சுமார் 1 லட்சம் லைக்ஸ்களைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் பலரும் இசையமைப்பாளர் அனிருத்தைப் பாராட்டி வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண