இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் நியூயார்க் நகரில் வலம் வந்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அனிருத் காவியா மாறன் காதலித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகிய நிலையில் இந்த புகைப்படம் காதல் கிசுகிசுக்களுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
கோலிவுட் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருப்பவர் அனிருத். அடுத்தடுத்து விஜய் , ரஜினி , அஜித் , கமல் , என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் படங்களில் பணியாற்றி தற்போது இசைத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்றே சொல்லலாம். தற்போது இந்தியில் ஷாருக் கான் நடிக்கும் கிங் , விஜயின் ஜன நாயகன் , ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசை மட்டுமில்லாமல் அனிருத்தின் காதல் வாழ்க்கையும் ரசிகர்களிடையே அவ்வபோது பேசுபொருளாவது வழக்கம். சன் நெட்வர்க்கின் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறன் . ஐ.பி.எல் சன்ரைசர்ஸ் அணிக்கு உரிமையாளராக இருந்து வருகிறார். சினிமாத்துறையில் இருந்து காவ்யா மாறன் விலகியிருந்தாலும் அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அனிருத் காவ்யா மாறன் இருவரும் டேட் செய்து வருவதாக அண்மை காலங்களில் அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நியூயார்க் நகரில் வலம் வந்த அனிருத் காவ்யா மாறன்
அனிருத் மற்றும் காவ்யா மாறன் காதலித்து வருவதாக அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அனிருத் இந்த தகவலினை உடனே தனது எக்ஸ் பக்கத்தில் மறுத்திருந்தார். இப்படியான நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை அனிருத் மற்றும் காவ்யா மாறன் பற்றிய காதல் கிசுகிசு தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் இருவரும் சேர்ந்து தெருக்களில் வலம் வந்ததை ரசிகர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றன
முன்னதாக இசையமைப்பாளர் அனிருத் தன்னைவிட 6 வயது மூத்த நடிகையான ஆண்ட்ரியாவை காதலித்து வந்தார் . இருவரும் முத்தம் கொடுத்துக்கொள்ளும் நெருக்கமான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரியளவில் சர்ச்சை ஏற்படுத்தின.