இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறன் வரும் நவம்பர் 12 ஆம் தேதி கிரீஸில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இதனைத் தொடர்ந்து நவம்பர் 21 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.  இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக அரசியல், சினிமா மற்றும் விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்களின் பெயர்கள் விருந்தினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அவர்களின் பட்டியல் இதோ

Continues below advertisement

அனிருத் காவ்யா மாறன் திருமணத்தில் பங்கேற்கும் பிரபலங்கள்

அரசியல் தலைவர்கள்

அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

திரையுலக பிரபலங்கள்

திரையுலகைப் பொறுத்தவரை ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார் – ஷாலினி, தனுஷ், சிவகார்த்திகேயன் – ஆர்த்தி, அல்லு அர்ஜுன் – சினேகா ரெட்டி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், நடிகர்கள் பிரசன்னா, சூரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு பிரபலங்கள்

காவ்யா மாறன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாகத்தில் இருப்பதால் கிரிக்கெட் உலகைச் சேர்ந்த பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இதனால் இந்திய கிரிக்கெட் துறையைச் சேர்ந்த முக்கிய முகங்களையும் வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்பார்க்கலாம்.

அரசியல் தலைவர்கள், முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொள்ளப் போகும் மிக பிரம்மாண்டமான திருமண வரவேறு நிகழ்ச்சியாக இந்த நிகழ்வு அமையப் போகிறது. கோலிவுட் திரைத்துறையில் இத்தகைய பிரம்மாண்டமான திருமண நிகழ்ச்சி இதுவே முதல் முறை என்றே சொல்லலாம்  

அனிருத் காவ்யா மாறன் திருமண தகவல் வெளியானதில் இருந்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பல்வேறு மீம்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள். பெண் வீட்டார் , மாப்பிள்ளை வீட்டார் என இரு தரப்பாக பிரிந்து இணையத்தில் உலா வரும் மீம்கள் வைரலாகி வருகின்றன.