இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த தகவல்கள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படும் தேதி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது

Continues below advertisement

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக அனிருத் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியான டிசி படத்தின் பின்னணி இசை மட்டும் பாடல்கள் பட்டிதொட்டி எல்லாம் ஹிட் ஆகியுள்ள நிலையில் அனிருத்க்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது. அடுத்தபடியாக ரஜினி நடிக்கும் தர்மன் , லோகேஷ் கனகராஜ் இயக்கும் அல்லு அர்ஜூன் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் அனிருத்தின் திருமணம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளது. 

அனிருத் காவ்யா மாறன் திருமணம் 

அனிருத் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை செயல் அதிகாரி காவ்யா மாறன் இருவரும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி இந்த தகவல்களுக்கு மேலும் வலு சேர்த்தன. கடந்த ஆண்டு திருமணம் குறித்த வதந்திகளுக்கு அனிருத் சமூக வலைதளத்தில் மறுப்பு தெரிவித்திருந்தாலும், அவரது மாமாவும் நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன் அனிரு காவ்யா மாறன் திருமணம் நடைபெற இருப்பதை உறுதிபடுத்தியிருந்தார். 

Continues below advertisement

திருமணம் எங்கே ? எப்போது ?

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி அனிருத் மற்றும் காவ்யா மாறனின் திருமணம் நவம்பர் 10-ம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த திருமணம் கிரீஸில் நடைபெற உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்கு முன்பு வெளியாகிய தகவல்களில் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் திருமணம் நடைபெறலாம் என்று மட்டுமே கூறப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தேதி மற்றும் இடம் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருந்தாலும், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, நவம்பர் 10-ம் தேதி கிரீஸில் திருமணம் நடைபெறும் என்ற தகவல் உறுதியாகும் வரை இதை ஒரு தகவலாக மட்டுமே பார்க்க வேண்டியுள்ளது.