இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காவ்யா மாறன் திருமண ஏற்பாடுகள் மும்மூரமாக நடைபெற்று வருகின்றன. கிரீஸில் நடைபெறவுள்ள இந்த திருமண நிகழ்வில் பங்கேற்க நான்கு தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியை மூன்று வெவ்வேறு இடங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Continues below advertisement

கிரீஸ் செல்லும் நான்கு குடும்பத்தினர்

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் குடும்பத்தினர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குடும்பத்தினர், அனிருத் குடும்பத்தினர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கிரீஸ் பயணிக்கவுள்ளதாக வலைப்பேச்சு சேனல் தகவல் வெளியிட்டுள்ளது. 

3 திருமண வரவேறு நிகழ்ச்சி

அதேபோல் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஒரே இடத்தில் நடத்தாமல் மூன்று இடங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு நிகழ்ச்சி சன் நெட்வொர்க் ஊழியர்களுக்காகத் தனியாக ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் மற்ற வரவேற்பு நிகழ்ச்சிகளில் திரையுலகப் பிரபலங்கள், தொழில்துறையினர், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

Continues below advertisement