90ஸ் கிட்ஸ்களின் இளமைப்பருவம், 2k கிட்ஸ்களின் குழந்தைப்பருவம் என மொபைல் போன் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை பெரிதும் ஆக்கிரமித்த கேம்களில் ஆங்க்ரி பேர்ட்ஸுக்கு பெரும் பங்கு உண்டு. தற்போது சந்தையில் நுழையும் புதிய ரக கேம்கள் அத்தனைக்கும் முன்னோடி இந்த ஆங்க்ரி பேர்ட் விளையாட்டுதான். உண்டுவில்லால் பறவையைக் குறிபார்த்து செலுத்துவதுதான் விளையாட்டு. இந்தக் குட்டி கான்சப்ட் கேமுக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த ரசிகர் பட்டாளத்துக்கு மேலும் ஒரு நற்செய்தி ஆங்க்ரி பேர்ட் புதிய பரிமாணத்தில் மீண்டும் சந்தைக்கு வருகிறது. 2012ல் வெளியான ரோவியோ ரக ஆங்க்ரி பேர்ட் கேம்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தைக்கு வந்துள்ளன. 


 






 


இதற்கான அறிவிப்பை அந்த நிறுவனம் ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது. ‘உங்கள் குழந்தைப்பருவம் பேசுகிறேன். போய் விளையாடுங்கள். பறவைகளைக் குறிபார்த்து எரிந்து பன்றிகளைத் தாக்குங்கள்’ என அந்த ட்வீட் வெளியாகி உள்ளது. வெளியானதை அடுத்து பழைய பெயரிலேயே மீண்டும் ஆங்க்ரி பேர்ட் விளையாட்டு தொடங்கப்பட வேண்டும் என #BringBack2012 ஹேஷ் டேக்குகள் டெரெண்ட் ஆகின. இந்த விளையாட்டு ஐஓஎஸ்ஸில் 89 ரூபாய்க்கும் ஆண்ட்ராய்ட்களில் 85 ரூபாய்க்கும் கிடைக்கப்பெறுகிறது.